பக்கம்:அழகர் கோயில்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

120 அழகர்கோயில் பிரம்மோற்சவம், 'சட்டத்தேர்திருநாள்' எனப்பட்டது. இத்திரு விழாவில் நடைபெறும் தேரோட்டத்தில் பெரிய தேரைப் பயன்படுத் துவதில்லை. நான்கு சக்கரங்களை மட்டும் உடைய சகடையின்' மீது இறைவனை எழுந்தருளச் செய்வர். இதுவே 'சட்டத்தேர்" எனப் படுகிறது. இத்திருவிழாவும் இப்போது நடைபெறுவதில்லை. அட்டவணை குறிக்கும் திருக்கார்த்திகைத் திருவிழா இக்கோயி லில் இப்பொழுதும் நடந்துவருகிறது. எனினும் கோயில் வரலாறு அதனைக் குறிக்க மறந்துவிட்டது. புரட்டாசி மாதம் 'கருட சேவை' நடைபெறுவது இக்கோயிலில் இல்லை. எனினும் கோயில் லாறு அதனைக் குறிக்கிறது. கோயில் வரலாறு குறிப்பிடும். 1. கொட்டகை உற்சவம் (சித்திரை) 2. முப்பழ உற்சவம் (ஆனி) 3. கருடசேவை (ஆடி) 4. திருவாடிப் பூரம் (ஆடி) 5. உறியடி உற்சவம் (ஆவணி) 6. விநாயகசதுர்த்தி (புரட்டாசி) 7. விஜயதசமி (புரட்டாசி) 8. தீபாவளி (ஐப்பசி) 9. கனு உற்சவம் (தை) வர- ஆகியவை தொழில், சுதந்திர அட்டவணையில் திருவிழாக்களாகக் குறிப்பிடப்படவில்லை. எனினும் மேற்குறித்த திருநாட்களில் பணி யாளர்க்கு உள்ள பொறுப்பினையும், உரிமைகளையும் தொழில், சுதந்திர அட்டவணை குறிப்பதனால் அக்காலத்திலும் இத்திரு விழாக்கள் நடந்தன என்று தெரிகிறது. 3 "கொட்டகை உற்சவம்' எனக் கோயில் வரலாறு குறிப்பது, சித்திரைத்திருவிழாக் கொட்டகை அமைக்கக் கால்நடும் (கால்கோள்) விழாவாகும். இந்த நாளையும் சேர்த்தே தொழில், சுதந்திர அட்டவணை சித்திரைத் திருவிழா நாட்களைப் பத்தாகக் கணக்கிடு கிறது; கோயில் வரலாறு இதனைத் தவிர்த்து ஒன்பதாகக் கணக்கிடுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/127&oldid=1467992" இலிருந்து மீள்விக்கப்பட்டது