பக்கம்:அழகர் கோயில்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருவிழாக்கள் 121 கோயில் வரலாறு குறிக்கும் ‘தைலப் பிரதிஷ்டை' மூன்றாண் டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் விழாவாகும். ஆண்டுதோறும் நடைபெறுவது இல்லை. எனவே தொழில் சுதந்திர அட்டவணை இதனைத் தனியாகக் குறிக்கவில்லை போலும். 6.2. ஆடி அமாவாசை (கருப்பசாமியின் திருவிழா) : வரலாறும் தொழில். சுதந்திர அட்டவணையும், கோயில் குறிப்பிடாத ஒரு திருவிழா ஆடி அமாவாசையாகும். பெருவாரி யான கிராமத்து மக்கள் இத்திருவிழாவில் கலந்துகொள்வதை ஆய் வாளர் மூன்றாண்டுகளாகத் (1977, 78, 79) தொடர்ந்து காண. முடிந்தது. இந்திருவிழா இக்கோயில் இறைவனுக்காக எடுக்கப்படும் திருவிழா அன்று; கோயில் பிராமணப் பணியாளர்க்கும் இதில் தொடர்பில்லை. இது கோயில் கோபுரவாசலில் உள்ள பதினெட் டாம்படிக் கருப்பசாமிக்குரிய திருவிழாவாகும். கருப்பசாமியாகக் கருதப்பெறும் இரட்டைக் கதவுக்கு இந்நாளில் சந்தனம் பூசப்பெறு கிறது. இச்சன்னிதியில் கருப்பசாமிக்குச் சிலையுருவம் இல்லை. சந்தனம் பூசப்பெறும் இக்கதவிலேயே கருப்பசாமி உறைவதாகக் கருதி மக்கள் வணங்குகின்றனர். இந்தக் கதவுகளை நாட்டி வைத் ததாகக் கருதப்படும் குடும்பத்தினர் ஆடி அமாவாசையன்று சந்தனக்குடம் கொண்டுவந்து இக்கதவுகளுக்குச் சந்தனம் பூசுகின் றனர். எனவே இந்திருவிழா இக்கோயில் இறைவனான அழகரின் திருளிழாவாக அல்லாமல், கருப்பசாமியின் திருவிழாவாகக் கொண் டாடப்படுகின்றது. சத்தனம் பூசும் உரிமையுடைய குடும்பத்தினர் கோனார் சாதியினராவர். இத்திருவிழா கோயில் ஆட்சி மரபில் சேரவில்லை. எனவே மேற்குறித்த இரு நூல்களும் இதனைக் குறிக்கவில்லை. 63. திருவிழாக்களின் சமூகத் தொடர்பும் தொடர்பீன்மையும் : கோயில்களில் நடைபெறும் திருவிழாக்கள் பொதுவாகக் கோயிலுக்கும் சமூகத்துக்குமான உறவைக் காத்தும் வளர்த்தும் வருவன. இருப்பினும் சில திருவிழாக்களுக்கே தொலைவிலுள்ள மக்களையும் ஈர்த்துச் சமூகத்துக்கும் கோயிலுக்குமிடையே நல் லுறவை வளர்க்கும் ஆற்றல் அமைத்திருக்கின்றது. பிற திரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/128&oldid=1467993" இலிருந்து மீள்விக்கப்பட்டது