பக்கம்:அழகர் கோயில்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

122 அழகர்கோயில், விழாக்கள் கோயிற்பணியாளர், கோயிலை ஒட்டி வாழ்வோர் ஆகியோரளவிலேயே நின்றுவிடுகின்றன. அழகர்கோயிலில் சித்திரைத் திருவிழா, ஆடித்திருவிழாவில் ஒன்பதாம் நாளான தேர்த்திருவிழா. ஐப்பசி மாதம் நடைபெறும் எண்ணெய்க்காப்புத் திருவிழா எனப் படும் தலையருவித் திருவிழா, மார்கழி இராப்பத்துத் திருவிழாவில் எட்டாம் நாள் நடைபெறும் வேடுபறித் திருவிழா ஆகியவையே கோயிலுக்கும் சமூகத்துக்குமான தொடர்பு வாயில்களாக அமைந்து, சுற்றுவட்டார மக்களையும் ஈர்க்கும் திறமுடையனவாக விளங்கு கின்றன. ஏனைய திருவிழாக்கள் கோயிற்பணியாளர் அளவிலேயே அமைந்துவிடுகின்றன; கோயிலுக்கும் சமூகத்துக்கும் உள்ள உறவில் இத்திருவிழாக்களுக்குப் பங்கில்லை எனலாம். மலையடிவாரத்திலமைந்த இக்கோயிலைச் சுற்றி ஊர் எதுவும் இன்றளவும் இல்லை. வடக்கிலும், மேற்கிலும் மலைகள் அமைந் திருக்க, கிழக்கிலும், தெற்கிலும் ஒருமைல் தொலைவிலேயே கிரா மங்கள் அமைந்துள்ளன. கோயிற் பணியாளர்க்கென அமைக்கப் பட்டுள்ள குடியிருப்புக்களைத் தவிர இன்றளவும் கோயிலுக்கருகில் மக்கள் வாழும் பகுதிகள் இல்லை. எனவே சமூகத்தொடர்புடைய திருவிழாக் காலங்களைத் தவிரப் பிற காலங்களில் சுற்றுலாப் பயணிகளே இக்கோயிலுக்கு வருகின்றனர்; அருகிலுள்ள கிராமத்து மக்கள்கூட வருவதில்லை. என்வே சமூகத் தொடர்பில்லாத திரு விழாக்கள் இக்கோயிலில் பணியாளர் அளவிலேயே அமைந்து விடுகின்றன.. இக்கோயிலுக்கு மட்டுமேயுரிய சில தனித்த இயல்புகளை யுடைய தேரோட்டம், எண்ணெய்க்காப்பு எனப்படும் தலையருவித் திருவிழா, வேடுபறித் திருவிழா ஆகிய சமூகத் தொடர்புடைய திருவிழாக்கள் இவ்வியலின் பிற்பகுதியில் விரிவாக ஆராயப்பெறும். சித்திரைத் திருவிழா அடுத்த இயலில் ஆராயப்பெறும். 6.4. சமூகத் தொடர்பில்லாத திருவிழாக்கள்: வசந்த உற்சவம் முதலான பதினைந்து திருவிழாக்கள் பெரு மளவு மக்கள் கலந்துகொள்ளும் திருவிழாக்களாக அமையாமல், இக்கோயிற் பணியாளர் அளவிலேயே அமைந்துவிடுகின்றன. அவை கீழே விளக்கப்படுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/129&oldid=1467994" இலிருந்து மீள்விக்கப்பட்டது