பக்கம்:அழகர் கோயில்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

138 அழகர்கோயில் சொல்லுகிறது இது' எனத் தொடங்கும் இந்த ஏட்டுச்சுவடி ஓரங்களில் பொடிந்திருப்பதனால், நூல் முழுவதையும் வாசிக்க முடியவில்லை. வழிமறித்து மடியிலிருப்பதைப் பிடுங்கிக் கொள் வதால் 'மடிபீடி' என்ற சொல் வழிப்பறிக் கொள்ளையை உணர்த்துவதாகும். 13. மிற்குறித்த பட்டயம். பாரிக்க: பிற்சேர்க்கை எண்.11:2 14. ஆறாயிரப்படி குருபரம்பராப்ரபாவம், பக். 77-78. இராமானுசர் காலம் ஆண்டாளின் காலத்திற்கு ஏறத்தாழ நான்கு நூற் றண்டுகள் பிற்பட்டதாகும். இருப்பினும் தன் செயலால் இராமானுசர் ஆண்டாளின் அண்ணனாகக் கருதப்படுகிறார். தமிழ்நாட்டில் வைணவர்களிடையே. பெரிதும் வழங்கப்பெறும் ஆண்டாளுக்குரிய வாழித்திருநாமப் பாட்டிலும்,

  • 'பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே

என்று ஆண்டாள் இராமானுசரின் தங்கையாகக் குறிக்கப்படு வதும் இக்கதையினை அடியொற்றியேயாகும். 15. நாலாயிரத் திவ்விய பிரபந்தம், பாடல் 592. 16. ஆறாயிரப்படி குருபரம்பராப்ரபாவம், பக். 266-267. 1 IF, விளக்கத்திற்குக் 'கோயிற் பணியாளர்கள்' இயல் காண்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/145&oldid=1468012" இலிருந்து மீள்விக்கப்பட்டது