பக்கம்:அழகர் கோயில்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

154 அழகர்கோயில் மலை நாயக்கர் கள்ளரோடு தான் கொண்ட உறவினை இத்திருவிழா வில் உருவகப்படுத்தியிருக்கிறார் என்று கொள்ளவேண்டும். திருமலை நாயக்கர் கள்ளருடைய தனித்தன்மையைக் காட்டும் அழகரின் சித் திரைத் திருவிழாவினை மதுரையின் தனித்துவத்தினைக் காட்டும் மீனாட்சி திருமணத் திருவிழாவுடன் இணைத்திருக்கிறார் என்கிறார் அட்சன்.30 இதனை மேலும் விளக்குகையில், 'அழகரைக் கள்ளர் வழி மறிக்கும் சடங்கு திருமலைநாயக்கர் கள்ளர்களை அரசியலில் வென்றதனையும், பின்னர் இரு சாராரும் ஒரே தெய்வத்தினை வணங்குவோர் என்ற முறையில் நல்லுறவு கொண்டதனையும் உரு வகமாகக் காட்டுவதாகக் கொள்ளலாம் என்றும் அவர் கூறுகிறார்.31 மதிப்பீடு : இம்மூன்றாவது செய்தியினை ஓர் ஊகத்தின் (assumption) அடிப்படையில் அட்சன் தருகிறார். கள்ளர்க்கும் அழகர்க்குமிடை மிலான உறவு திருமலைநாயக்கர் காலத்திலோ (கி.பி. 1623-1669) அல்லது அதற்கு முன்னரோ ஏற்பட்டிருக்க வேண்டும் என்பதே அவரது ஊகம், இவ்வூகத்தோடு வரலாற்றுச் சான்றுகள் முரண்படுகின்றன. விசயரங்க சொக்கநாதன் காலத்தில் (கி.பி. 1706-1717) கள்ளர்கள் மதுரை நகருக்குள் நுழைந்து கொள்ளையிட்ட செய்தியினையும் அழகர்கோயிலுக்கு வருவோர்களைக் கள்ளர்கள் தொல்லைப்படுத் திய செய்தியினையும் மதுரைவீரசுவாமி கதை கூறுகிறது கி.பி 1700இலும் கி.பி. 1709இலும் மார்ட்டின் அடிகளார் எழுதிய கடிதங்கள் மதுரை நாயக்கராட்சியை அக்காலத்தில் கள்ளர்கள் எதிர்த்துப் போரிட்ட செய்தியைக் காட்டுகின்றன. 33 32 திருமலைநாயக்கர் காலத்திலோ அதற்கு முன்னரோ கள்ளர் அழகர் உறவு ஏற்பட்டு, திருமலை நாயக்கர் காலத்தில் திருவிழாச் சடங்குகளில் அவ்வுறவு நிலைநிறுத்தப்பட்டிருந்தால்', அதன்பின்னர் கள்ளர்கள் மதுரையில் நாயக்கர் அரசியல் தலைமையினை எதிர்த்துப் போரிட்டிருக்கமாட்டார்கள். ஏனெனில் இவ்வுறவு வெறும் அரசியல் உறவாக மட்டுமன்றி ஆன்மீக வண்ணமும் (spritual colour) பெற்ற மைவதாகும். எனவே திருமலை நாயக்கர் காலத்தில்' கள்ளர்கள் அழகர்கோயிலோடு உறவு கொண்டுவிட்டதாகக் கருதமுடியாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/161&oldid=1468030" இலிருந்து மீள்விக்கப்பட்டது