பக்கம்:அழகர் கோயில்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சித்திரைத் திருவிழாவும் பழமரபுக் கதையும் 155 மதுரை நாயக்கராட்சியின் வீழ்ச்சிக்காலத்தில் பெரும்பாலும் விசயரங்க சொக்கநாதன் காலத்தில் அழகரின் ஊர்வலத்தைக் கள்ளர்கள் மறித்த நிகழ்ச்சியும் பின்னர் அவர்கள் கோயிலோடு நல்லுறவு கொண்டதும் நடந்திருக்கலாம். 34 எனவே வரலாற்றுச் சான்றுகளின்றி அட்சன் தரும் ஊகத்தின் அடிப்படையிலான செய்தி ஏற்கவியலாததாகும். செய்தி 4 திருமலை நாயக்கரே விசயநகரப் பேரரசிலிருந்து முதலில் பிரிந்த மதுரை நாயக்க மன்னராவார். எனவே பாண்டிய நாட்டின் பழைய அரசியல் சுதந்திரத்தை அவர் மீண்டும் நிலைநிறுத்த வேண்டியிருந்தது. எனவே தன் நாட்டில் 'தர்மம்' தழைக்க மன்னர் இது போன்ற திருவிழாக்களை நடத்தியிருக்கலாம் என்கிறார் அட்சன் 35 இதனை விளக்குகையில் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டதனால் பிற என்னதான் இருப்பினும் ஓரளவு மதுரைக்குத் தாம் அன்னியர் என்பதனால், பழந்தமிழ்நாட்டின் மன்னர் எனத் தன்னை நிலைநிறுத்திக்கொள்வதற்கும் (to legitimize himself) இத் திருவிழா திருமலை நாயக்கருக்கு வழி வகுத்திருக்கலாம் என்கிறார்.36 மதீப்பீடு யதே. அட்சன் தரும் நான்காவது செய்தி ஏற்றுக்கொள்ளக்கூடி திருமலைநாயக்கருக்குப் பின்னரும். 'மொழியால் நாம் மதுரைக்கு அன்னியர்' என்ற உள்ளுணர்வு மதுரை நாயக்க மன் னர்களை உறுத்திக்கொண்டேயிருந்திருக்கிறது. பதினெட்டாம் நூற் றாண்டின் முற்பகுதியிலெழுந்த அழகர் கிள்ளைவிடு தூது நூலின் தலைவி, "கிளியே, நீ செல்லும்போது திருமாலாகிய அழகர் தன் தேவியரோடு இருப்பின், அவர்கள் கோபம் கொள்ளாதவாறு என் நிலைமையினை வடுகிலே (தெலுங்கிலே) சொல் என்கிறாள். 91 'திருமாலின் தேவியர்க்குத் தெலுங்கு மொழி தெரியாது. நிருமா லாகிய அழகர் நெலுங்குமொழி தெரிந்தவர்' என்னுங் கருத்து 'தெலுங்கர்க்கும் தமிழர்க்கும் அழகர் பொதுவானவர்' என விரிந்து, தமிழர்களுக்குத் தெலுங்கர்களிடம் நேச உணர்வினை வளர்க்கப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/162&oldid=1468031" இலிருந்து மீள்விக்கப்பட்டது