பக்கம்:அழகர் கோயில்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சித்திரைத் திருவிழாவும் பழமரபுக் கதையும் 157 மற்றவராகக் கருதப்பட்டு, மதுரைக் கோயிலுக்குள் நுழையவும் உரிமை மறுக்கப்பட்டவர்கள் எனக் குறிப்பீடும் அட்சன், அழகர் கோபித்துக்கொண்டு மதுரைக்குள் நுழையாமல் திருப்புவதனை மேற்குறித்த உண்மையோடு இணைத்து, தாழ்ந்த சாதியினரான கிராமப்புற மக்களுக்கும் நகரத்தினரான உயர்சாதியினருக்கும் இடை யிலான போராட்டமாகக் காண்கிறார். அட்சன். இத்தப் போராட்டம் கருத்தளவிலானது என்பதோடு நிறுத்திக்கொள்கிறார். ஆனால் ஆய்வாளர்க்குக் களஆய்வில் கிடைத்த செய்திகள் உண்மையிலேயே இவ்வாறு ஒரு போராட்டம் நிகழ்த் ததேர என எண்ணத் தூண்டுகின்றன. 'தல்லாகுளத்திலிருக்கும் கருப்பசாமி கோயில் அவ்ளிடத்தில் எப்படி வந்தது?' என்ற கேள்விக்குத் தகவலாளிகள் நந்த பதில் இது : "ஒருமுறை அழகரின் ஊர்வலம் அந்த இடத்தில் வந்தபொழுது அவரைப் பாண்டிமுனி மறித்துக்கொண்டது. உடனே அழகர், தம் காவலாளியான கருப்பசாமியை நினைத்தார். அவர் நினைத்தவுடனே கருப்பசாமி அந்த இடத்திற்கு வந்து பாண்டிமுனியை அடித்து விரட்டிவிட்டு, அந்த இடத்திலேயே அமர்ந்துவிட்டது 40 காலத்தில் இந்தக் கதை அழகர் ஊர்வலம் ஏதோ ஒரு ஏதோ ஒரு காரணம் பற்றி இந்த இடத்தில் மறிக்கப்பட்டது என்ற செய்தியினைச் சொல்வதாகவே தோன்றுகிறது. இந்த இடத்தில், கருப்பசாமி கோயிலுக்கு எதிர்ப்புறம், சாலையின் மறுபகுதியில் ஓர் அனுமார்கோயில் உள்ளது. அழகர் கோயிலின் பதிளெட்டாம்படிக் கருப்பசாமி சன்னிதியின் முன்புறத் திலுள்ள படிகளின் தெற்குப்புறம் தரையினையொட்டி ஒரு சிறிய அனுமார், தானும் காவல் தெய்வமாக அமர்ந்துள்ளது இங்கே குறிப்பிடவேண்டிய செய்தியாகும். தல்லாகுளம் அனுமாருக்கு 'ஜெயவீர அனுமார்' என்று பெயர். இந்த அனுமாருக்கு இடுப்பில் ஒரு கத்தியும் செருகப்பட்டிருக்கிறது. இந்த அனுமார் இந்த இடத்தில் என்ன வீரம் காட்டினார்? யாரை ஜெயித்தார்? ஆகியவை இயல்பாக எழும் கேள்விகள் ஆளும். அழகரை, வேடமிட்டு வழிபடும் அடியவர்கனில் திரியெடுத்து டுபோர் சாட்டையினால் அடித்து ஆடுவோர் ஆகியோரின் உடை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/164&oldid=1468033" இலிருந்து மீள்விக்கப்பட்டது