பக்கம்:அழகர் கோயில்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

186 அழகர்கோயில் அவதாரங்களிலும் காட்சிதரும் திருவிழா நிகழ்ச்சிகளை அவதாரக் கதைகளோடு விரிவாக வருணிக்கிறது. மாயாவதார வர்ணிப்பு முதலியவை ஒரேயொரு அவதாரத்தைப் பற்றி மட்டும் பாடும் தனித்தனி வர்ணிப்புகளாகும். பிற அவதாரங்களுக்குத் தனியான வர்ணிப்புப் பாடல்கள் கிடைக்கவில்லை. சித்திரைத் திருவிழாவில் தசாவதார நிகழ்ச்சி முதல் நாள் இரவு தொடங்கி மறுநாள் பொழுதுவிடியும் வரை நடைபெறும். இவற்றைக் காணவுரும் மக்கள் இரவுமுழுவதும் தூங்காது விழித்திருக்கவேண்டும். எனவே இம்மக்கள் தூங்காது விழித்திருக்கவேண்டி இரவு முழுவதும் பாடும் வகையில் அவதார வர்ணிப்புகள் பிறந்திருக்க, வேண்டும். எனவே சித்திரைத்திருவிழா நிகழ்ச்சிகளே இவற்றின் பிறப்புக்கும் அடிப்படையர்கின்றன. ஆயினும் தொடர்ந்து மூன்றாண்டுகளாக (1977, 1978,1979) ஆய்வாளர் கண்டதில், இந்நிகழ்ச்சியில் நகர்ப் புற மக்களே நிறைந்திருப்பதை அறியமுடிந்தது. நாட்டுப்புற மக்களையோ வர்ணிப்பாளர்களையோ காணமுடியவில்லை. 8.17. பிற பாடல்கள் : சித்திரைத் திருவிழாவில் பாடப்பெறும் இப்பாடல்களைத் த 95 வேறுசில பாடல்களையும் வர்ணிப்பாளர் பாடுகின்றனர். அவை வர்ணிப்புப் பாடல்கள் அல்ல; கதை பொதிந்த பாடல்கள் ஆகும். எனவே அவற்றை வர்ணிப்புப் பாடல்களைப் போல் வீதியில்நின்று யாடுவதில்லை. ஓரிடத்தில் கேட்கும் ஆர்வமுள்ள பலர் அமர்ந்து, ஒருவரைப் பாடச்சொல்லிக் கேட்டு மகிழ்வர். சில நேரங்களில் மதுரை வட்டாரத்தில் சிறுதெய்வக்கோயில் திருவிழாக்களில் பொழுது போக்கு நிகழ்ச்சியாக ஒருவர் பாட ஏனையோர் அமர்ந்து கேட்கின் றனர். அவ்வாறு பாடப்பெறும் பாடல்கள் கிருஷ்ணன் பிறப்பு கிருஷ்ணன் தூது, கீசகன் சண்டை, திரௌபதி கலியாணம், திரௌ பதி வஸ்திராபஹரணம் (துகிலுரிதல்). கண்ணன் பிறப்பு, விராட பர்வம், வீமன் சண்டை வர்ணிப்பு, பார்வதி கலியாணம் முதலியன. இவற்றுள் பார்வதி கலியாணம் தவிர ஏனையவை மகாபாரதத் திலிருந்து கதைப்பொருள் பெற்றவை என்பது சிந்தனைக்குரிய செய்தியாகும். 8.18. இலக்கிய மரபு : இதிகாசங்களில் ஒரு பகுதியை மட்டும் எடுத்து நாடகமா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/193&oldid=1468066" இலிருந்து மீள்விக்கப்பட்டது