பக்கம்:அழகர் கோயில்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

210 அழகர்கோயில் கின்றது : அழகிய மணவாளப் பெருமாள் பெரிய ஜீயரை அர்ச் சமுகேந அழைத்து 'நாளை முதல் பெரிய திருமண்டபத்திலே ஈடு தொடங்கிக்காலேபம் நடத்தும்' என்று நியமித்தருளி 22 அவரும் அவ்வாறு செய்கிறார். வழிபடுதெய்வம் பூசை செய்வோர் மூலமாகத் தன் கருத்தினைத் தெரிவிப்பது சிறுதெய்வநெறியில் 'சாமியாடுதல்' எனப்படும். அதையே குருபரம்பராப்ரபாவமும் கோயிலொழுகும் 'அர்ச்சக முகேந (அர்ச்சகர் மூலமாக) எனக் குறிப்பிடுகின்றன. பூசை செய்வோர் அல்லது வழிபடுவோர்மீது தெய்வம் இறங்கிக் கூறும் வாக்கே 'தெய்வ வாக்கு' எனக் கருதப்படும். அவ்வாறு தெய்வமுற்ற நிலையில் அவர்கள் தோற்றம் எவ்வாறிருக்குமென அடியார்க்கு நல்லார் உரையிலுள்ள ஒரு மேற்கோள் பாடலால் அறியலாம்: "தெய்வ முற்றோ னவிநயஞ் செப்பிற் கைவிட் டெறிந்த கலக்க முடைமையும், மடித்தெயிறு கவ்விய வாய்த்தொழி லுடைமையும் துடித்த புருவமும் துளங்கிய நிலையும் செய்ய முகமுஞ் சேர்ந்த செருக்கும் எய்து மென்ப வியல்புணர்ந் தோரே23 இதுவே தெய்வமுற்று ஆடுவோரின் மெய்ப்பாடாகும். இத்தகைய நிலையில்தான் அர்ச்சகர்கள் வழிபடு தெய்வத்தின் வாக்கினைத் தெரித்திருக்கமுடியும். இவ்வாறு ஆடுவதனையே சிறுதெய்வ நெறியில் 'சாமியாடுதல்', 'மருள்ஏறி ஆடுதல்' எனக் குறிப்பர். சிறுதெய்வ நெறியில் சிறப்பிடம்பெறும் சாமியாடுதலைத் தமிழ்நாட்டு வைணவ ஆசாரியர்களும் மறைமுகமாக ஏற்றுக்கொண்ட செய்தியினைக் கோயிலொழகும் ஆறாயிரப்படி குருபரம்பராப்ரபாவ மும் உணர்த்துகின்றன. நாட்டுப்புறக் கூறுகளை அழகர்கோயில் திருவிழாவில் காணும் நமக்குத் தமிழ் நாட்டு வைணவப் பின்னணி அதற்கு ஆதரவு கொடுத்த செய்தியை அறியும்போது வியப்பேதும் இல்லை அரசர்களின் தொடர்ந்த ஆதரவைத் தமிழ்நாட்டில் குறைவர்கப் பெற்ற மதம் வைணவமே. எனவே அது அன்றையச் சமூகத்தில் கீழ்நிலையிலிருந்த மக்களிடம் சென்றது. அவர்களின் வழிபாட்டு முறைகளைத் தயங் காது ஏற்றுக்கொண்டது. திருவிழாக் காலங்களில் அவர்களைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/217&oldid=1468091" இலிருந்து மீள்விக்கப்பட்டது