பக்கம்:அழகர் கோயில்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கோயிற் பணியாளர்கள் 219 னுக்கு அனுமார் முகரும் உரிமையானவை. பண்டாரி முகர்மண் கொண்டுவருவார்; முத்திரைகளைச் சரி பார்ப்பார்.12 இப்போது அர்ச்சகரிடமும், கோயில் நிருவாக அதிகாரியிடமும் மட்டுமே இப்பொறுப்பு உள்ளது; பிறருக்கு இல்லை. 'ஸ்தானிகர் குழுவும் இப்போது இல்லை. 2. ஒவ்வொரு நிருவாகத்தினரும் சாதாரண நாட்களிலும், திருவிழா நாட்களிலும் வைத்துக்கொள்ளவேண்டிய உதவியாளர் களின் எண்ணிக்கையில் நடைமுறையும் அட்டவணையும் வேறுபடு கின்றன. "அட்டவணை உதவியாளாகளின் எண்ணிக்கையினை அதிகமாகக் குறிப்பிடுகிறது" என்பது கோயிற் பணியாளர் கருத் தாகும். பொருளாதாரக் காரணம் கருதியே கோயிற் பணியாளர் அட்டவணை கூறும் உதவியாளர் எண்ணிக்கையோடு உடன்பட மறுத்து நீதிமன்றம் சென்றனர்.13 3. ஒன்றிரண்டு சிறிய வேலைகள் தங்களுடையனவல்ல வென்று பணியாளர்கள் கூறுகின்றனர். 10.9. வைகானச அர்ச்சகர்கள் : தமிழ்நாட்டு வைணவக் கோயில்களில் இருவகையான ஆகம் நெறிகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. ஒன்று 'வைகாளசம்’ மற்றொன்று 'பாஞ்சராத்திரம்' எனப்படும். விகானசர் என்னும் முனிவர் உருவாக்கிய ஆகம நெறியினைப் பின்பற்றுவோர் வைகானசர் எனப் படுவர். ஐந்து இரவுகளில் திருமாலாகிய இறைவனால் உபதேசிக்க பட்டதாகக் கருதப்படுவது பாஞ்சராத்திர நெறியாகும். இந்த இரு நெறியினைப் பின்பற்றும் பிராமாணர்களும் தம்முள் மணவுறவு கொள் வதில்லை. பூசை அழகர்கோயிலில் மூலத்திருமேனியினைத் தொட்டுப் செய்யும் அளச்சகர்கள் (பட்டர்கள்) வைகானசர் ஆவர். கோயிலின் பிற பணிகளில் ஈடுபட்டுள்ள ஏனைய பிராமணப் பணியாளர் அனைவரும் பாஞ்சராத்திர ஆகம நெறியினராவர். பட்டர்களும் உதவியாகப் பணி புரிந்தாலும், மூலத்திருமேனியினைத் தொடும் உரிமை இவர்களுக் கில்லை. சோழர் கல்வெட்டுகளில் முதலாம் இராசராசன் காலத்தி லிருந்து வைகானசர் பெருமளவு குறிக்கப்பெருகின்றனர். கோயில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/226&oldid=1468100" இலிருந்து மீள்விக்கப்பட்டது