பக்கம்:அழகர் கோயில்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

220 அழகர்கோயில் நிருவாகமும் கோயில் நிலங்களும் இவர்களது பொறுப்பில் விடப்பட்டி ருந்தன",4 பரத்துவம், வியூகம், விபவம். அந்தர்யாமி, அர்ச்சை எனும் வைணவ வழிபாட்டு நெறிகளில் அர்ச்சாவதாரத்தையே (கண் ணுக்குப் புலனாகும் பொருட்களால் செய்யப்பெற்றுக் கோயில்களில் வழிபடப்பெறும் திருமேனிகளை வணங்குவதையே) வைகானசர் பின்பற்றுகின்றனர். பிற நெறிகளை ஏற்பதில்லை. 'பல' ஊர்களும் அலைவதேன்? அங்குள்ள இறைவன் நெஞ்சிலே உள்ளான்! என்னும் பொருள்பட அமைந்த ஆழ்வார்களின் பாசுரங்களை இவர்கள் ஒத்துக் கொள்வதில்லை" என்பர் வெங்கட்ராமன்ா, (எடுத்துக்காட்டு:

  • "திருமாலிருஞ்சோலை மலை யென்றேன் என்ன திருமால் வந்துள்ள தெஞ்சு நிறையப் புகுந்தான் (திருவாய்மொழி 10:8:1)

10.10. வைகரனசர்- பாஞ்சராத்திரர் வேறுபாடு: ஆழ்வார்கள். சாரியர்கள் சன்னிதிகளில் வைகானசர் பூசை செய்வதில்லை. அவர்கள் வழிபடப்பெறுவோராக வைகானச ஆகம நெறியில் குறிக்கப்பெறாததே காரணமாகும். இக்கோயிலும் ஆழ்வார் கள், ஆசாரியர்கள் சன்னிதிகளில், வடமொழி வேதவிண்ணப்பம் செய்யும் பொறுப்புடைய "பட்டைகள்' என்ற பணிபிரிவினைச் சேர்ந்த பாஞ்சராத்திர நெறியினரே பூசை செய்கின்றனர். வைகானசரிடம் தனிப்பட்ட வேறுசில பண்புகளும் காணப் படுகின்றன. பாஞ்சராத்திரப் பிரிவினராகிய பிராமணர்களின் குடும் பங்களில் நடைபெறும் பிறப்பு, பெயரிடல், பூப்பு, திருமணம். இறப்பு நிகழ்ச்சிகளில் திராவிடவேதம் எனப்படும் திவ்வியபிரபந்தப் பாசுரங்கள் கட்டாயம் ஓதப்பெறும். வைகானசர் வடமொழி வேதம் மட்டுமே ஓதுவர். 16 பாஞ்சராத்திரப் பிரிவினரான பிராணமர்களும், வைணவத்தில் ஈடுபாடுடைய பிற சாதியினரும், ஒரு குருவினைப் பணித்து வைணவ முத்திரை தரித்துக் கொள்வர். திருமாலின் படைக்கருவிகளாகிய சங்கு சக்கர அச்சுக்களை நெருப்பிலிட்டுக் காய்ச்சி இருபுயங்களிலும் ஒரு குருவினால் பொறிக்கப்பெறுவதே 'முத்திரை' யாகும். இதனைப் பிராமணர் 'சம்ஸ்காரம்' என்றும் பிராமணரல்லாத சாதியீனர், 'அக்கிளி முத்திரை'. 'கட்டி முத்திரை என்றும் கூறுவர். 'திருமாலின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/227&oldid=1468101" இலிருந்து மீள்விக்கப்பட்டது