பக்கம்:அழகர் கோயில்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

236 அழகர்கோயில் சாதியினரான இரண்டு குடும்பத்தவர் இக்கதவுகளில் சந்தனம் சார்த்தி வழிபடுகின்றனர். அவர்கள் முன்னோரான சுப்பக்கோன், பச்சக்கோள் என்ற இருவர் இக்கதவுகளைச் செய்தமைத்த செய்தி, சந்தனம் சாத்தும் நிகழ்ச்சியினை வருணிக்கும் நாட்டுப்பாடலால் உறுதிப்படுத்தப்படுகிறது.* 11.10. சத்தியப் பிரமாணம்: கருப்பசாமி சன்னிதியில், வழக்குகளில் சத்தியப் பிரமாணம் செய்வது வழக்கமாகவுள்ளது. இதன்படிப் பிரமாணம் செய்பவர் சத்தியவாக்கை 'வாங்கிய பணத்தை நான் கொடுத்துவிட்டேன்', 'திருடப்பட்ட பொருளை நான் எடுக்கவில்லை' என்பது போலச் சொல்லி, சந்தனக்கதவு வழியாக உள்நுழைந்து, பதினெட்டுப் படிகளையும் தாண்டிக் கோபுரவாசற் சுதவு வழியாக வெளிவருதல் வேண்டும். இத் தெய்வத்தின்முன் ஒருவரும் பொய் சொல்லவும் துணியமாட்டார்கள். ஆகையால் பெரிய வழக்குகள், வியாஜ்ஜியங்கள் முதலியவற்றில் உண்மையறிய, வியாஜ்ஜியக்காரர்களைக் கோர்ட் டார் கடைசி நேரத்தில்கூட இக்கருப்பணசாமி சன்னிதியில் பிர மாணம் செய்யச்சொல்லி உண்மையைக் கண்டுபிடித்துக் கொள் வார்கள் என்று கோயில் வரலாறு விளக்குகிறது.9 கி.பி.1803இல் எழுதப்பட்ட தொழில், சுதந்திர அட்டவணை, **சன்னிதி படிவாசல் பிரமாணத்தில் வாதி, பிரிவாதிகளால் இரண்டுக்கு கலிபொன் 2 பணம் 4க்கு பூசாரி பணம் 1 கும் பினிசர்க்கார் மணியத்துக்கு பணம் முறைகார அர்ச்சக பரிசாரகள் பணம் 1 போக பாக்கி பொன் 1 பணம் 4க்கு பங்கு 7க்கு ஸ்ரீரெங்கராஜபட்டர், அலங் காரபட்டர், ஜீயர் ஸ்ரீகாரியம், அமுதார், திருமலைநம்பி, பண்டாரி, திருமாலிருஞ்சோலைமலைப் பிரியன் 7 பேரும் சமபங்காய் எடுத்துக் கோள்கிறது. தேவஸ்தானத்துக்கு முன் சொல்லினபடிக் கலிபொன் 1. பணம் 4 கட்டிவிடவேணும் என்று கோயிற் பணியாளர் உரிமை யினைக் கூறும்.29 இப்பொழுது (1979) பிரமாணம் செய்வோர் கட்டவேண்டிய தொகை ரூ. 15 என்று கோயில் வரலாறு கூறுகிறது. 30 11.11. சத்தியர் பீரமரணம்-விரிந்த பார்வை : இவ்வாறு கோபம் மிகுந்த சிறுதெய்வங்களின் சன்னிதியில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/243&oldid=1468126" இலிருந்து மீள்விக்கப்பட்டது