பக்கம்:அழகர் கோயில்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

298 அழகர்கோயில் தெரிந்துகொள்ளச் சான்றில்லை, பெரும்பாலுல், மதுரையின் அரசியல் தலைமை பலவீனமடைந்திருந்த விசயரங்க சொக்கநாதன் அல்லது அவன் மனைவி மீனாட்சியின் ஆட்சிக்காலத்தில் (கி.பி. 1695-1742) இந்நிகழ்ச்சி நடைபெற்றிருக்கலாம். கோயிலில் திருட வந்தவர்களைப் பிடித்து வெட்டி, கோபுர வாசற்படிக்குக் கீழ் புதைத்ததால் அவ்வாயில் தீட்டுப்பட்டது. எனவே அவ்வழியே தெய்வம் வருவது முறையன்று; மக்களும் அவ்வழியே செல்ல அஞ்சுவர். எனவே கோயில் தலைவாசல் அடைக்கப்பட்டது. இயற்கையல்லாத முறையில் இறந்தவர்களின் ஆவி பற்றிய மக்களின் அச்சத்தோடுகூடிய நம்பிக்கைகளுக்காக அவ்விடத்தில் சிறுதெய்வமான கருப்பசாமி நிலைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். திருமாவின் போர்க்கருவியான சக்கரத்தாழ்வார் மட்டும் இறந்தவர் ஆவிபற்றிய அச்சத்தினையும், பகையினையும் வென்று அவ்வழியே செல்லமுடியும். எனவே சக்கரத்தாழ்வார்க்கு மட்டும் அவ்வாசல் ஆண்டுக்கொருமுறை திறக்கப்படுகிறது. கதை, நடைமுறை-இரண்டிலிருந்தும் நாம் பெறக்கூடிய முடிவுகள் இவையேயாகும். 11.13. கருப்பசாமி தோற்றம் : வாசுதேவன், சங்கர்ஷணன், பிரத்தியும்நன், அநிருத்தன் என்ற நான்கு மூர்த்தங்களை இணைத்து வழிபடும் வைணவர்களின் நெறிக்கு 'வியூகநெறி' என்று பெயராகும். இந்நெறி தமிழ்நாட்டிலும் பரவியிருந்ததற்குப் பரிபாடலில் சான்றுகள் காணப்படுகின்றன. வாசுதேவ வழிபாடும், சங்கர்ஷண வழிபாடும் வடஇந்தியாவில் கிறித்துவுக்கு முன்னரே வழக்கிலிருந்தன. ஹரிபாத் சக்கரவர்த்தி, பாணினியின் உரையாசிரியரான பதஞ்சலி, வாசுதேவ சங்கர்ஷண வழிபாட்டைக் குறிப்பதால் கி.மு.முதல் நூற்றாண்டிலேயே இது வளர்ந்துவிட்டது என்று கூறுகிறார்.36 வியூகக் கி.பி நான்கு, ஐந்நாம் நூற்றாண்டுகளி "லயே கொள்கை பெருவளர்ச்சி பெற்றது என்று கே வி சௌந்தரராஜன் கருதுகிறார்ள் ஆனால் டி.சி. சர்க்கார், குப்தர்கள் காலத்திலேயே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/245&oldid=1468117" இலிருந்து மீள்விக்கப்பட்டது