பக்கம்:அழகர் கோயில்.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

252 அழகர்கோயில் கொடுத்துள்ளனர். வாழ்க்கைப் போராட்டத்தில் நிலைபெறுவதற் காகச் சமய நம்பிக்கைகளைத் தளர்த்திக்கொள்வது சமய இயக்க வரலாற்றில் தவிர்க்க முடியாததாகும் என்பதையே இக்கோயிற் பணியாளர் பற்றிய செய்திகள் நமக்கு உணர்த்துகின்றன. பதினோராவது இயலில் அழகர்கோயிலிலுள்ள பதினெட்டாம் படிக் கருப்பசாமியைப் பற்றிய செய் கள் ஆராயப்பட்டன. வழக்கு மரபிலுள்ள நம்பிக்கைகள், கதைப்பாடல், நடைமுறைகள் ஆகியவை வழி இச்சிறுதெய்வத்தின் வரலாறும், இச்சிறுதெய்வத்தின் வைணவச் சார்புடைய தோற்றமும் விளக்கப்பட்டன. இச்சிறுதெய்வத்தைப் பற்றிய செய்திகளும், சமய இயக்கங்கள் தங்களைக் காத்துக்கொள்ள எவ்வகையில் சமூகத்தோடு ஒத்துப்போகின்றன (compromise) என் பதையே உணர்த்துவனவாக அமைகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/259&oldid=1468136" இலிருந்து மீள்விக்கப்பட்டது