பக்கம்:அழகர் கோயில்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அழகர்கோயிலின் தோற்றம் 19 மலைக் குறவஞ்சி ஆகிய இலக்கியங்களும் குறிப்பிடுகின்றன. 18 திரேதாயுகத்தில் அரசு (போலி) மரம் தலவிருட்சமாயிருந்துள்ளது. வடமொழியிலமைந்த இக்கோயில் தலபுராணம், ஒரு மரத்தினடியில் தருமதேவனுக்குக் காட்சி தருகின்ற திருமால், "இந்த ஸ்ரீவிருக்ஷ மானது க்ருதயுகந்தில் ஆலவிருக்ஷமாகவும் த்ரேதாயுகத்தில் அச்வந்த (அரச) மரமாகவும், த்வாபரயுகத்தில் பில்வ விருக்ஷமாகவும் கலியுகத் தில் ஜ்யோதிர் (ப்ரதீப) விருக்ஷமாகவும் ஆகிறது. இந்த ஜ்யோதிர் விருந்தினடியிலுள்ள என்னை என் பக்தர்களுங்கூட அர்ச்சிக்கக் கடவார்கள் எனக் கூறுவதாகக் குறிக்கும். தலபுராணத்திலிருந்து நமக்குக் கிடைக்கும் மற்றொரு செய்தி இதுவாகும். கலியுகத்தில் மட்டுமே ஜ்யோதிர் மரத்தடியில் பக்தர் கள் இறைவனை வழிபட முடிந்தது. திரேதாயுகத்தில் அரசமரம் தலவிருட்சமாயிருந்தபோது, இத்தலத்திறைவனைப் பக்தர்கள் வழி படக்கூடவில்லை என்பதாகும். பொதுவாக, ஒரு தலத்திற்கு நான்கு தலவிருட்சங்கள் இருந்ததாகக் கூறுவது ஒரு விதிவிலக்கான செய்த யேயாகும். 2. 6. நரசிம்ம வழிபாடு சமணத் கோயில்களையும், பௌத்தக் கோயில்களையும் வைணவர் கைப்பற்றும்போது முதலில் நரசிங்கமூர்த்தியை அமைப்பது வழக்கம்" எனப் பொதுவான ஒரு கருத்தினைக் கூறும் சீனி. வே. தம் கருந்துக்கு ஆதரவாக, 'சமணர்கள் ஏவிய யானையினை மதுரை சோமசுந்தரக்கடவுள், நாரசிங்க வெங்கணை எய்து கொன்றாள்' என்றும், 'யானை மலையாக மாறியபின் அக்கணை கொடிய நரர சிங்கமாய் அவ்விடத்தில் வீற்றிருந்தது' என்றும் கூறுகின்ற திரு விளையாடற் புராணத்து யானை எய்த படலச் செய்திகளை எடுத்தும் காட்டுகிறார்.15 அவர் கருத்து மறுக்கவியலாத ஒன்றாகும். இதுபோலவே 'பௌத்தக் கோயில்' என அவர் கருதும் அழகர்கோயிலுக்கும் இக்கருத்து பொருந்திவருகிறதா என்று காணவேண்டும். அழகர்கோயிலுக்குள் மூன்றாம் திருச்சுற்றில் கருவறைக்கு நேர் பின்னாக, கருவறையை நோக்கியபடி யோக நிலையில் ஒரு நரசிம்மர் காணப்படுகிறார். இரணிய எதை நிகழக் காரணமாக இருந்த சீற்றம் தன் யோசத்தால் தணியத் நானே யோகமூர்த்தியானார்" என யோக நரசிம்மத்தின் தத்துவத்தினை விளக்குகிறார் குமார்வாடி கே.ராமானுஜாசாரியார்.15 அழகர் கோயிலில் உள்ள யோக நரசிம்மரை, 'ஜவாலா நரசிம்மர் என

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/26&oldid=1467881" இலிருந்து மீள்விக்கப்பட்டது