பக்கம்:அழகர் கோயில்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

20 அழகர்கோயில் அழைக்கின்றனர். அவரது சினம் தலையிலிருந்து நெருப்புச் சுவாலையாக வெளிப்படுவதாகக் கூறுகின்றனர். இச்சிலைக்கு நேராக, கற்கூரையில் ஒரு திறப்பு வைத்துள்ளனர். நாள்தோறும் இச் சிலைக்கு எண்ணெய்க் காப்பிடுகின்றனர். யோக நரசிம்மரின் சினம் ஆவியாகி மேலே கற்கூரையிலுள்ள திறப்பு வழியாக வெளியேறு வதாகக் கூறுகின்றனர். இவ்வளவு சினத்துக்குரிய காரணம் யாது? இது தவிர அதே பகுதியில் ஒரு லெட்சுமிநரசிம்மர் உள்ளார். கல்யாண மண்டபத்தில் இரணியனைக் கொல்ல எடுத்த கோலத் திலும், அவன் உடலைக் கிழித்த கோலத்திலுமாக இரு நரசிம்மர் சிலைகள் உள்ளன. உட்கோட்டை நுழைவாயிலின் மேலாக மற்றுமொரு நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் உள்ளார். 'இத்தலம் நரசிம்ம வழிபாட்டிற்கு முக்கியமானது' என்பர் கே. என். ராதா கிருஷ்ணன். 18 வைணவப் பகைவனாக விளங்கிய இரணியனை அழிப்பதே நரசிம்ம அவதாரத்தின் நோக்கமாகும். எனவே புறமதத்தவர்களை எதிர்க்க முற்படும் போதெல்லாம். நரசிம்மமூர்த்தத்தினை வைணவர் நிறுவி வழிபடுவது பொருத்தமுடையதே. அழகர்கோயிலிலும் நரசிம்ம வழிபாடு தனித்தன்மையுடன் விவங்குவதன் காரணம் புறமத எதிர்ப்பே என்று கொள்ளலாம். 2.7. புறமகத்தவர் யார்? அழகர்கோயிலில் வைணவத்தினால் எதிர்க்கப்பட்ட 'புறமதத் தினர்' யாவர் என்பதை அடுத்துத் தெளிவுபடுத்துநல் வேண்டும். திருமங்கையாழ்வார் இக்கோயில், புந்தியில் சமணர் புத்தரென் றிவர்கள் ஒத்தன பேசவு முகந்திட்டு எந்தை பெம்மானார் இமையவர் தலைவர் எண்ணிமுன் இடங்கொண்ட கோயில்'19 எனக் குறிப்பதன் மூலம், இப்பகுதியில் சமணரும் பௌத்தருமே எதிர்க்கப்பட்ட புறமதத்தவர் என அறியலாம். இந்த இரு மதத்த வரிலும் அழகர்கோயிலில் எதிர்க்கப்பட்டவர் யார் என்பதனை மற்றுமொரு சான்றினால் அறியலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/27&oldid=1467882" இலிருந்து மீள்விக்கப்பட்டது