பக்கம்:அழகர் கோயில்.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

256 அழகர்கோயில்

  • மாடமலி மறுகிற் கூடற் குடவயின்' (மாடங்கள் நிறைந்த மதுரைக்கு மேற்கே) திருப்பரங்குன்றம் உள்ளது என்று முரு காற்றுப்படை தெளிவாகக் குறிப்பீடுகின்றது. பழமுதிர்சோலை எனப்படுவது அழகர்மலை என்பது உண்மையானால் அது மதுரைக்கு வடக்கே அல்லது வடகிழக்கே உள்ளது என்றும் முருகாற்றுப்படை குறித்திருக்கவேண்டும். அப்படிக் குறிக்கவில்லையே, என்?

பெரும்பாறையாக இன்று விளங்கும் திருப்பரங்குன்றத்தை 'மந்தியும் அறியா மரம்பயில் அடுக்கம்' என்றும், 'அரமகளிர் ஆடும் சோலைகளை உடையது' என்னும் முருகாற்றுப்படை வருணிக்கிறது. அழகர்மலையே பழமுதிர்சோலையானால் இன்றளவும் நீரோடும் சிலம்பாற்றை (நூபுரகங்கையை) நக்கீரர் குறிக்காமல் விடுவாரோ? சங்க இலக்கியங்களில் மற்றொன்றான பரிபாடல் சிலம்பாற்றையும் குறிப்பிட்டு அம்மலையை 'மாலிருங்குன்றம்' என்றும் தெளிவாகக் குறிக்கிறது. 15 சங்க இலக்கியங்களுக்குச் சற்றே பிற்பட்ட சிலப்பதி காரம் சிலம்பாற்றையும் குறித்து இம்மலையைத் 'திருமால் குன்றம் என்றும் கூறுவதும் இங்கு எண்ணவேண்டிய செய்தியாகும். பரி பாடல் ‘பரங்குன்றத்தை முருகன் தலம் எனப் பாடுகிறது. ஆனால் பழமுதிர்சோலையைக் குறிக்கவில்லை. மாறாக, மாலிருங்குள் றத்தில் பலராமனும் திருமாலும் சொல்லும் பொருளுமாக விளங்கு கின்றனர்' என்று பாடுகின்றது.15 அலைவாயினை அதே பெயரோடு புறநானூற்றுப் பாடல் ஒன்றும், தொல்காப்பியம் களவியல் உரை மேற்கோள் பாடல் ஒன்றும் குறிக்கின்றன. புறநானூற்றின் 55ஆம் பாடல், வெண் தலைப் புணரி அலைக்கும் செந்தில்' எனக் குறிக்கிறது. அகநா னூற்றின் இரண்டு பாடல்கள் (1.61) 'பொதினி' என்ற பெயரால் ஆவிநன்குடியைக் குறிக்கின்றன. சிலப்பதிகாரம் திருவேரகத்தை முருகன் தலம் என்றே குறிக்கின்றது. ஆனால் குன்றுதோறாடலும் பழமுதிர்சோலையும் பதினைந்தாம் நூற்றாண்டினரான அருணகிரி தாதர் காலம்வரை வேறு எந்த இலக்கியங்களிலும் குறிக்கப்பட வில்லை. செந்தில், செங்கோடு. வெண்குன்றம், ஏரகம் ஆகிய மூருகன் தலங்களைக் குறிக்கும் சிலப்பதிகாரம், முருகன் ஆறுபடை வீடு களுக்கு உரியவன் என்று எங்குமே பேசவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/263&oldid=1468140" இலிருந்து மீள்விக்கப்பட்டது