பக்கம்:அழகர் கோயில்.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அழகர் வர்ணிப்பு 297 கடலாழியைக் கடந்து, அமுதளித்த பாவனைபோல் கரியமால் இங்குவந்து எந்தனுக்கு அமுதளிப்பாய் என்று ஆடிப்பரதவித்து இறைவன் இளைப்பாற 160 தன் சவரப் பஞ்சணையாம் சப்ரமணி ஊஞ்சல் சகலாத்துமெத் தையிட்டு தங்கவைத்து மலர்வீசி சாமரங்கள் போட்டுச் சாரங்கனைக் கொண்டாட கொங்கு முடியணிந்தோன் வணங்கி நிற்கு மானிடர்க்குப் பொழு தாவுதென்று சொல்லி வீரமணிப் புரவிதன்னை பெருவிரலால் சூழ்ந்து வெகுவேகமாய்த் தூக்கி வாரணத்தைக் காத்த வள்ளல் வண்டியூர் தோக்கி வளநதிக் குள்ளே நடக்க 165 பக்தர்களும் தொண்டர்களும் ஊழியங்கள் செய்து பகவானைச் சூழ்ந்துவர சித்தர்களைக் காவல் வைத்தோன் தென்திருமலைச் சாரியில் திருமால் ஒருகரையாய் நாளை வாரேன் கருடன்மேல் கட்டளை தவறாமல் நடத்தியே காட்சிதரும் வேளை யிதுவறிந்து வண்டியூர் போயி சற்றுநேரம் தங்கி விமலிக்குச் சேதி சொல்ல சுண்டினார் சவுக்காலே தேவியை நினைத்து குளிர்ந்த மணலில் துவளுதாம் குதிரையது 170 மண்டியிட்டு மணல்வாரி வாலைக் கிளப்பீ இளந்தோப்பைத் தேடிவருகுதாம் மாந்தேசி நெல்லிமலைக் காடு மூங்கிவளப் பண்ணை நெருஞ்சித் திடல் கடந்து மல்லிகைப்பூ பூட்டி தென்னை வளப்பூமி தாண்டுது லகானை யிழுத்த கையோடு வேர்வையது சிந்த நாடகஞ்சூழ் தென்றலினால் உலகாதிபன் தேனூரார் கட்டளையில் உள்நுழையத் தேசி தன்னை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/304&oldid=1468182" இலிருந்து மீள்விக்கப்பட்டது