பக்கம்:அழகர் கோயில்.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

302 அழகர்கோயில் பேர்த்தெடுத்த அக்கிழங்கைப் பெருமான் சிரசிலுற்ற பெருங்கிழங் கைந் தோண்டலுற்றாள் தூக்கி வெளியேறிடவே ஆங்கோர் இடத்தில் துலங்கவே ஆணிக் கிழங்கெடுக்க வேணுமென்று ஏக்கமுடன் பேர்த்திடவே கடப்பாரையாலே இடறினான் உட் கிழங்கை கடப்பாரை தைத்திடவே அரிஓம் நமோ நாராயணன் சிரசில் கடுகிரத்தம் வந்திடவே 60 சடப்பால் வலையன் நிற்க ஆதிமகா மூலமவர் சன்னபின்னலாய்க் குதித்து அதிற் சிறந்த பேவலையன் கிழங்கெடுத்து அக்கானகம் தாண்டி பிரியமுடன் பிள்ளை பெண்டிரோடு பேசாமல் ஆடிநின்றான் நினைச்ச குறியுரைப்பான் பிள்ளையில்லா தவர்க்கெல்லாம் இளையான் வரங்கொடுப்பான் நினைச்ச குறிதான் கேட்டு இதுதான் சாமியென்று நேமநெறி தவறாமல் 65 வலையன் மொழிந்தபடி பாண்டி மகாராசன் மதுரைவிட்டுச் சேனையுடன் நிலமகளும் போற்றிடவே தல்லாகுளத்தை நிமிசமுடன் தான் கடந்து மாரியம்மன் ஆலயமும் பாண்டியன்சேனை மந்திகுளந் தான் கடந்து தேனுள்ள பூமூணு மாவடியாம் ஈச்ச வனமுள்ள காதக்கிணறும் வனங்கள் பலகடந்து அப்பன் திருப்பதியை வலம்பார்த்து ஓர் முகமாய் 70 கனஞ்சிறந்த ஆண்டியப்பன் வெள்ளியக்குன்றம் கணக்கரசன் தேசம்விட்டு ஆனபரி முன்னடக்க அழகமலைத் தாதனுக்கு மேளதாளம் முழங்க அழகமலைமீது வந்து ஞானத் திருநெடுமால் இருக்குமிடத்தில் நாடியே அவ்வலையன் ஓடிக் குலவையிட்டான் அப்பாண்டி மகாராசன் உண்டையுடன் தாள்வணங்கி நாடினான் தன்னறிவால் வள்ளிக்கிழங்கை நான்குதிக்கும் பேர்த் தெடுத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/309&oldid=1468187" இலிருந்து மீள்விக்கப்பட்டது