பக்கம்:அழகர் கோயில்.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பிற்சேர்க்கை 11 : 5 பதினெட்டாம்படிக் கருப்பன் உற்பத்தி வர்ணிப்பு இவ்வர்ணிப்புப் பாடல் மதுரை தத்தனேரியில் 25.6.1978 இல் நடைபெற்ற அழகர்கோயில் பகதர்-வர்ணிப்பாளர் மகாசபைக் கூட்டம் நடந்தபோது, மதுரை ஆரப்பாளையம் மாரியப்பன் என் வரால் பாடப்பட்டது. பிறவிக்குருடரான இவர் ஐந்தானயது தொடங்கிப் பாடிவருகிறார். இப்போது இவருக்கு வயது 37. இவர் மட்டுமே வர்ணிப்புப் பாடுவதனைத் தொழிலாகக் கொண்டுள்ளார். ஆய்வாளருக்காக 'ராக்காயி வர்ணிப்பு', 'கருப்பசாமி பிறப்பு வளர்ப்பு வர்ணிப்பு' ஆகிய பாடல்களையும் இவர் பாடினார். இ ருடைய தந்தை வர்ணிப்பு ஆசிரியர் மொட்டையக்கோளாசின் நேரடி மாணவராவார். எனவே இவரும் மொட்டையக்கோனாரே தனது குரு என்று கூறுகிறார். இவர் எண்ணெய் விற்கும் செட் டியார் சாரியைச் சேர்ந்தவர். இவ்வர்ணிப்பு மொட்டையக்கோனாரால் எழுதப்பட்டதாகும். சோலை மாமலை சுந்தரரசா, பதினெட்டு லாடரையும் படியாகச் செய்ததை பகருதற்குத் துணைவருவாய்-எந்தன் குருவைப் பணிந்து கோவிந்தன் செய்த திருக்கூத்துகளைக் கூற வேன் மாசபைக்கே வடக்கே வெகுதூரம் அய்யோத்தி நாட்டில் மந்திரம் கற்றவர்கள் 5 தடங்கடல்சூழ் பூமிதன்னைச் சுற்றியே பார்ப்போமென்று தங்கள் மனதிலெண்ணி ஈரொன்பதுபேரும் அவரவர்க் கேற்றபடி இசைந்த நூல் கற்ற வர்கள் யாரோர்க்கும் தோற்றாதபடி எங்கே பொருளிருந்தாலும் பார்த் தெடுத்து வருவோமென்றே சரம் யார்ப்பவனொருவன் பச்சி பார்ப்பவ னொருவன் தகடு பார்ப்பவ னொருவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/311&oldid=1468190" இலிருந்து மீள்விக்கப்பட்டது