பக்கம்:அழகர் கோயில்.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொழில் அட்டவணை 347 ரகாள் திருத்திக் கொடுக்கிற திருப்பரிவட்டங்களை பெருமாள் சாத்துப் படிக்கு எடுத்துக்கொடுக்கிறது. திருமஞ்சனம் திருவாறாதனம் அவசரங்களுக்கு சந்ததி பரிசாரகாள் அறைத்துக் கொடுக்கிற சாத்துப் படியில் பரிமளம் சேர்த்துக்கொடுத்து வருகிறது. சந்நதி அறை கட்டளை, உபய கட்டளை, நாமாவளி, அர்ச்சனை ஆதிகால வழக் கப்படி ஜீய்யாள் சாதக கைங்கர்யபறாளை வைத்துக்கொண்டு கணத்தில் ஏற்பட்டபடி அரிசி பணம் சாதம் வகையறாவை பெற்றுக் கொண்டு நாமாவளி சொல்லி வருகிறது. நித்தியப்படியிலும் விசேஷப் படியிலும் உத்ஸவாதி புறப்பாட்டு அவசரங்களிலும் கோஷ்டியில் பிரதமத்திலிருந்து துடக்கம், சாத்துமுறை, பிரபந்தம் வகையறா ஸேவிக்கிறது. திருமஞ்சனம் அவசரங்களில் சூத்தாதிகள் ஸேவிக் கிறது. ஸன்னதி ஜீய்யாளுக்கு வாசஸ்தானமாக இருக்கிற உடை யவர் சன்னதி மடம், ஆசாரியால் சந்ததி வகையறா திருவாறாதன முதலியது செய்கிறது. சந்நதி ஸ்ரீ காரியம் விசாரணை, ஸ்தானீகம், காரியாதிகள் முழுவதும் பட்டத்து ஜீய்யாளுடைய ஆதினமாய் இருப்பதில் சசுலமும் ஜீய்யாளுடைய முத்திரை அதிகார பாரபாத்தியத்தின் பேரிலும், கங் காணத்தின் பேரிலும் கணக்குப்படி நடந்துவரச் செய்கிறது. நித்தியப் படியிலும் விசேஷப்படியிலும் உத்ஸவாதி புறப்பாட்டு அவசரங்களில் ஸ்ரீகாரியம் ஆசார்ய புருஷத்வ மரியாதையும் அத்தியாபகம், வேத பாறாயணம், ஸ்தானீகம் வகையறா மரியாதையும், இரட்டைப்படி மரி யாதை அருதி பரிவட்டம், சேஷவாகன பிரம்ஹாதாறோகனம் முதலிய உபசாரத்துடன் பிரதானமாய் இருந்து அதுகளுக்கு ஏற்பட்ட சகலவித வரும்படிகளும் கணக்கில் கண்டபடி அனுபவித்து வருகிறது. (3) திருமாலை ஆண்டார் மாசம் 30 நாளைக்கும் ஒரு நிர் வாகமும் தோழப்பய்யங்கார் 30 நாளைக்கும் ஒரு நிர்வாகமும் கணக்கில் ஏற்பட்டபடியால் நித்தியப்படியில் ஒவ்வொருவரும் சாதகத் துக்கு தன்னுடன் கூட நாலாயிரப்பிரபந்தம் வகையறா அத்தியா பசும் சாத்தின அஞ்சு திருநாமங்களை வைத்துக்கொண்டு நிந்தியப் படியில் திருப்பாவை, நித்தியானு சந்தானம், சூக்தாதி உபநிஷத்து, திருமஞ்சன ஸ்லோகம், அலங்கார ஸ்லோகம், திருமஞ்சனகவி, புஷ்பாஞ்சாலி, வேத விண்ணப்பம், இதிகாசபுராணம்,ஸ்தலபுராணம் முதலியது சேவிக்கிறது. நித்தியப்படி புண்ணியாகவாசனம் சங்கல்பம் செய்யும்போது அர்ச்சகாளுடன் கூட இருந்து ஜபிக்கிறது. பஞ்ச கவ்ய ஸ்தாபனம் செய்கிறது. அத்யாபகம், வேதபாறாயணம் பண்ணி வருகிறது. நித்தியப்படி விசேஷப்படி உத்ஸவாதி திரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/354&oldid=1468235" இலிருந்து மீள்விக்கப்பட்டது