பக்கம்:அழகர் கோயில்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இலக்கியங்களில் அழகர்கோயில் 29 1. பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் இயற்றிய 'அழகர் அந்தாதி' 2. வேம்பத்தூர் கவிகுஞ்சரமையரின் 'அழகர் கலம்பகம்' யலபட்டடைச் சொக்கநாதப் புலவரின் 'அழகர் கிள்ளை விடு தூது' 3. 4. வேம்பத்தூர் சாமி கவிகாளருத்திரரின் 'அழகர் பிள்ளைத் தமிழ்' 5. பெருங்கரை கவிகுஞ்சர பாரதியின் 'அழகர் குறவஞ்சி' 6. ஐம்புலிபுத்தூர் கிருஷ்ணையங்காரிள் 'சோலைமலைக் குறவஞ்சி' 7. நெற்குப்பை பிள்ளைத்தமிழ் பைரவையரின் *திருமாலிருஞ்சோலை 8. மதுரகவி ஸ்ரீநிவாஸய்யங்காரின் ‘அலங்காரர் மாலை ஆகியவை ஆசிரியர் பெயர் அறியப்பட்ட சிற்றிலக்கியங்களாகும். பிள்ளைப்பெருமாளையங்கார் குறிப்பிடும் பத்மநாபப் பட்டர் மணவாளமாமுனிகளைப் பாராட்டியவர்; இராமானுசர் காலத்த வரல்லர் எனக் கூறி, ஐயங்காரின் காலம் கி. பி. பதினாறு அல்லது பதினேழாம் நூற்றாண்டாகலாம் என்பர் மு. கோவிந்தசாமி.' பல பட்டடைச் சொக்கநாதப் புலவரின் 'தேவையுலா'வினால், அக்காலத் தில் இராமநாதபுரத்தில் விஜயரகுநாதசேதுபதி (கி.பி.1711-1725) அரசாண்டதை அறியமுடிகிறது என உ. வே. சாமிநாதையர் குறிப் பிடுவதால், அப்புலவரின் அழகர் கிள்ளைவிடு தூதும் பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்ததென அறியலாம். அழகர் பிள்ளைத்தமிழ் நூலின் பதிப்பாசிரியர் திரு. நாராயணையங்கார், நூலாசிரியர் காலம் இற்றைக்குச் சுமார் நூற்றைம்பது வருஷங் களுக்கு முன்பு' என 1929இல் எழுதுகிறார்.1 எனவே இந்நூல் பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலெழுந்ததாகக் கருதலாம். அழகர் குறவஞ்சி ஆசிரியர் பெருங்கரை கவிகுஞ்சர பாரதி யாரின் காலம் கி. பி. 1810-1896 ஆகும். எனவே நூலெழுந்த காலமும் இதுவேயாகும். சோலைமலைக் குறவஞ்சி நூலின் பதிப் பாசிரியர் குறிப்பிலிருந்து தானாசிரியர் இருபதாம் நூற்றாண்டின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/36&oldid=1467894" இலிருந்து மீள்விக்கப்பட்டது