பக்கம்:அழகர் கோயில்.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொழில் அட்டவணை 357 உத்ஸவர் எழுந்தருளும்போதும் அலங்காரம் திருமஞ்சனம் வகையறா எடுத்து வரும்போதும் அதிகப்படி ஆள் வைத்துக்கொண்டு குடை சுருட்டி வகையறா எடுத்து வருகிறது. மைத்த விசேஷப்படி உத்ஸவா திகளுக்கு குடைசுருட்டி வகையறா விரேஷ உபசார வெளி விருது சாமான்களை எடுப்புகரார்களுக்கு எடுத்துக்கொடுத்து வாங்கி வைக்கிறது. சந்ததியில் எப்போதும் கார்த்திருந்து கண்பார்த்து காவல் கார்த்தும் உத்திரவாதம் செய்கிறது. அலங்கார (12) அண்ணாவிக் கொத்தன், அலங்கார கொத்தன் இந்த இரண்டு நித்தியப்படி தன்னுடன் கூட ஒருவனை வைத்துக்கொண்டு சந்ததிக்கு மாங்குலை வகையறா கொண்டுவந்து சிங்காரிக்கிறதும் திரைசீலை அசுமானகிரி வகையறா, ஜோடனை, சாமான்கள் வாங்கி கட்டுகிறது. பெரிய குத்துவிளக்கு வகையறா எடுத்து வருகிறது. வாகன மண்டபம் வகையறா யாவத்து இடங்க ளையும் வ:களங்களையும் அடிக்கடி எடுத்து சுத்தப்படுத்தி வரு கிறது. சந்ததி இரணியன் வாசலுக்குள் பட்டிருக்கிற யாவத்துயிடங் களையும், நேரடி மண்டபத்திலும் முளைத்திருக்கிற திருவரசு வெட்டுகிறது. வக்ஷஷ முறை வீதம் கோகிலாஷ்டமியில் உறியடிக் கிறது. விஜயதாமில் வன்னி மரம் வெட்டுகிறது. திருக்கார்த்திகை சொக்கப்பானை கட்டுகிறது. கரகம் எடுத்து வருகிறது. விசேஷசப் படி உத்ஸவாதி முதலிய தினங்களில் அகப்படி ஆள் வைத்துக் கொண்டு இரண்டு நிர்வாகக் காரனும் சேர்ந்து வாவத்து கௌத்து வேலையும் பார்த்து வருகிறது திருமண்டபம் முழுக்க ஜலம் கொட்டி சுத்தம் பண்ணுகிறது. திருத்தேர் சீங்காரம் குடில்கட்டை முதலியது போட்டு வருகிறது. தீவட்டி வகையறா செண்டு முதலியது சேரித்து குடுக்கிறது. தீவட்டி வகையறா சாமான்களை யிடுப்பான வசம் கொடுத்து வாங்கி வைக்கிறது. திருமடப்புள்ளி சாம்பல் வகையறாக் களை வாரி வெளியில் கொட்டுகிறது. அடுப்பு வகையறா போட்டு கட்டிக்குடுக்கிறது. அவன் கையாஷியிலுள்ள யாவந்து சாமான்க ளூக்கும் உத்தரவாதம் செய்கிறது. இந்த பிரகாரம் இரண்டு நிர்வாக ஸ்த்தனும் தல்லாகுளம் கோவில் திருவாசு வகையறா யாவந்து கொத்து வேலையும் பார்த்து வருகிறது. (13) ஸ்ரீபாதம்தாங்கி நிர்வாகம் ஒன்றுக்கு மாதம் 30 நாளும் பூறாவும் ஏற்பட்டிருக்கிற 4 காரைகாரரும் நித்தியப்படி விசேஷப்படி உத்ஸவாதிகளில் ஸ்வாமி எழுத்தருளுகிற பெரிய திருப்பல்லக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/364&oldid=1468247" இலிருந்து மீள்விக்கப்பட்டது