பக்கம்:அழகர் கோயில்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இலக்கியங்களில் அழகர்கோயில் 3.9. பலராம வழிபாட்டுக் குறிப்புகள் : 39 இத்தலத்தில் திருமாலும் பலராமனும் சேர்த்தே வழிபடப் பெற்றனர் என்பது பரிபாடல் தரும் செய்தியாகும். 'இருங்குன்றம் இருவரையும் தாங்கியுள்ளது' என்று கூறும் புலவர் இளம்பெரு வழுதியார், 'பெரும்பெயர் இருவரைப் பரவுதும் தொழுதே' என்று கூறியே பாடலை முடிக்கின்றார்.48 இருப்பினும் வழிபாட்டுப் பயனைக் குறிக்குமிடத்து, 'நாறிணர்த் துழாயோன் தாராது துறக்கம் பெறலரிது' என்கிறார்.49 பலராமனைத் திருமாலின் கூறாகக் கருதும் வியூகம் கோட்பாடு தமிழ்நாட்டிற் பரிபாடற் காலத்தில் பரவிவிட்டதை இப்பாடல் காட்டுகிறது. இத்தலம் குறித்த ஆழ்வார்களின் பாசுரங்களில் இங்குப் பலராம வழிபாடு திகழ்ந்ததைப் பற்றிய குறிப்புக்களே இல்லை. ஆழ்வார் களின் காலத்திலேயே பலராமனைத் தனித்து வழிபடும் வழக்கம் தமிழ்நாட்டில் மறைந்து போய்விட்டது. ஆழ்வார்கள் காலத்தில் தமிழ்நாட்டில் வியூகக் கோட்பாடு நடைமுறையில் இருந்ததற்குச் சான்றுகளேதும் இல்லை. அழகரந்தாதியில் ஒரு பாடல், "திருவிளையாடு திண்டோள் செங்கண்மால் பலதேவருடன் மருவிளையான் திருமாலிருஞ்சோலை” co எனக் குறிப்பிடும். இவ்வடிகளைக் கொண்டு அழகரந்தாதி ஆசிரியர் காலத்தில் இங்குப் பலதேவர் பலராமர்) வழிபாடு நிகழ்ந்ததாகக் கொள்ளவியலாது. மேற்குறித்த அடிகளில், "திருவிளையாடு திண்டோள்" என்ற தொடரினை அழகரந்தாதி ஆசிரியர், ஆண்டாளின் *திருமாலிருஞ்சோலைத் திருமொழி'யிலிருந்து எடுத்தாள்கிறார். 5t அதைப்போலவே இத்தலத்தில் பலராம வழிபாடு நிகழ்ந்த செய்தியை இத்தலம் குறிந்த பரிபாடலிலிருந்து அவர் பெற்றிருக்கலாம் என்று தோன்றுகிறது. 3.10. நடைமுறையில் பாசுரங்களின் செல்வாக்கு : கோயில் நடைமுறையில் பாசுரங்களின் செல்வாக்கு இன்றளவும் காணக்கிடக்கும் உண்மையாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/46&oldid=1467904" இலிருந்து மீள்விக்கப்பட்டது