பக்கம்:அழகர் கோயில்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கோயிலும் கள்ளரும் 75 வேளாண்மைப் பல்கலைக்கழக எல்லைச்சுவரை ஒட்டியுள்ள ஒரு நிருவாழிக்கல் சாசனம் அப்பகுதியை தென்பரப்பு நாட்டுத் திருமோ கூர் நாட்டுப் பகுதியாகக் குறிக்கிறது 16 வடபரப்புநாடு எது என அறியச் சான்றுகளில்லை. அஞ்சூர்,நாடு, இறவைசேரிநாடு, ஏரியூர்- மல்லாக்கோட்டை நாடு, சிறுகுடிநாடு, நடுவிநாடு, பத்துக்கெட்டுதாடு, பரப்புநாடு, வெள்ளலூர் நாடு இவையே இன்று அறியப்படும் நாடுகளின் பெயர் களாகும். இவை தவிர. 'தெரு' எனப் பெயர் கொண்ட வட்டாரங்களும் உள்ளன. தெற்குத்தெரு, வடக்குத்தெரு, மேற்குத்தெரு ஆகிய மூன்று தெருப்பிரிவுகளில் ஒவ்வொன்றிலும் சிற்சில கிராமங்கள் அடங்கும். இம்மூன்றும் சேர்ந்ததே 'மேலநாடு' என்று ஒரு தகவலாளி கூறுகின்றார்.கிழக்குத்தெரு என்று தனிப்பிரிவு ஏதும்இல்லை என்பதும் கருதத்தக்கது. தெற்குத்தெரு என்ற பிரிவில் அதே பெயரோடு ஓர் ஊர் உள்ளது. வடக்குத்தெரு, மேலத்தெரு ஆகியவற்றில் அவ்வாறில்லை. இந்தாட்டுப் பிரிவுகள், தெருப்பிரிவுகள் அனைத்திற்கும் நடுவில் பெரிய ஊராக அமைவது மேலூர் ஆகும். எனவே மேலூரும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களும் 'நடுவிநாடு' என அழைக்கப் படுகின்றன. அஞ்சூர்நாடு சிவகங்கைக்கு மேற்கில் ஐந்து ஊர்களைக் கொண்டதெனத் தெரிகிறது. இறவைசேரி, வெள்ளலூர், சிறுகுடி, ஏரியூர்- மல்லாக்கோட்டை ஆகிய நாட்டுப்பெயர்கள் அவற்றிலுள்ள ஓர் ஊர்ப்பெயரையே நாட்டுப்பெயராகத் தாங்கியுள்ளன. தெற்கே வையை நதியும், தென்மேற்கே வெள்ளியக்குன்றம் ஜமீனும் (பாளையப்பட்டு), மேற்கு வடக்காக அழகர்மலையும், வடகிழக்காக நத்தம் ஜமீனும் (பாளையப்பட்டு}, கிழக்கே சிவகங்கை ஜமீனும் இந்நாட்டுப்பிரிவுகளின் எல்லைகளாகும். இறவைசேரிநாடு மட்டும் சற்றுக் கிழக்கே தள்ளி தேவகோட்டைக்கருகில் உள்ளதாகக் கூறுகின்றனர். இந்த எல்லையை அடுத்துள்ள ஊர்களை முதியோர்கள் இன்றளவும் “பாளையப்பட்டுக் கிராமங்கள் என்றே அழைக் கின்றனர். எனவே இவ்வெல்லைக்குட்பட்ட நாடுகள் எந்தவொரு பாளையப்பட்டிலும் அடங்காதவையெனத் தெரிகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/82&oldid=1467943" இலிருந்து மீள்விக்கப்பட்டது