பக்கம்:அழகர் கோயில்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

82 அழகர்கோயில் எனவே இக்காலத்திலும் (கி.பி.1669) அழகரின் வழிவழி அடியா ராகி நாட்டுக்கள்ளர் கோயிலோடு உறவுகொள்ளவில்லை எனத் தெரிகிறது. எனவே அழகரின் ஊர்வலத்தைக் கள்ளர் மறிந்த நிகழ்ச்சி இதற்குப் பின்னரே நடைபெற்றிருக்க வேண்டும். அழகர்மாலை, "கள்ளக்குலத்தார் திருப்பணி வேண்டிய கள்ளழகா" என விளித்தாலும் அத்தொடர்பு எவ்வாறு, யார் ஆட்சி யில் ஏற்பட்டது என்பதை விளக்கவில்லை. திருமலை நாயக்கர் காலத்திற்குமுன் அழகர் ஊர்வலம் சோழ வந்தானுக்கருகிலுள்ள தேனூர் சென்றது. அவரே மதுரையில் மாரியில் நடத்த மீனாட்சி திருக்கல்யாணத்தையும் தேர்த்திருவிழா வையும் சித்திரை மாதத்திற்கு மாற்றி, இரண்டு நாட்கள் கழித்து அழகர் ஊர்வலத்தை மதுரைக்கு வரச்செய்தார். மாசி மாதத்தில் நடைபெற்ற மீனாட்சி திருமண விழாவை, அறுவடை முடியா நிலையில் வேளாண்மைப் பெருமக்கள் காணவரமுடியவில்லை என் பதும் இதற்குக் காரணம் என்பர் 31 சித்திரை மாதத்தில் மீனாட்சி திருக்கல்யாண ஊர்வலம், சித்திரை வீதியிலல்லாது மாசி வீதியில் வருவதும் இதற்கொரு சான்றாகும். அழகர் ஊர்வலம் தேனூர் சென்றதற்கும் ஒரு நடைமுறைச் சான்றுள்ளது. வையையாற்றின் நடுவில், வண்டியூரருகில் அழகர் மண்டுகமுனிவருக்கு முத்தி தரும் விழா நடைபெறும் மண்டபம் இன்றும் 'தேனூர் மண்டபம்' என்றே அழைக்கப்படுகிறது. தேனூ ரைச் சேர்ந்தவர்களே இன்றும் அங்கு கோயில் மரியாதை பெறு கின்றனர். மதுரை நதிவிழா நோக்கும் கருத்துடையாய்' என்று அழகர் மாலை ஓரிடத்தில் விளிக்கிறது. 32 எனவே அழகர் மதுரை வரு வதைக் குறிக்கும் அழகர்மாலை, திருமலைநாயக்கர் காலத்திற் குப் பின்னரே எழுந்திருக்க வேண்டும். இந்நூலின் காலத்தை அறுதியிட வேறு அகப்புறச் சான்றுகள் இல்லை. நூலாசிரியர் பெயரும் தெரியவில்லை. எனவே அழகர் ஊர்வல மறிப்பு எக் காலத்தில் நடந்ததென இந்நூலைக்கொண்டு அறுதியிட இயல வில்லை. 5.1.16. கள்ளர் வழிமறித்த காலம்: கி.பி 1803 இல் எழுதப்பட்ட தொழில் சுதந்திர அட்டவணை கோயிலில் கள்ளர்க்குரிய மரியாதையினைக் குறிப்பிடுவதால், அதற்கு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/89&oldid=1467950" இலிருந்து மீள்விக்கப்பட்டது