பக்கம்:அழகர் கோயில்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கோயிலும் கள்ளரும் 85 அழகர் தன் கோயிலுக்கு வியாறொருவர் போனாலும் கண்ட விடமெல்லாங் கள்ளருபத் திரத்தால் உழவு நடவுமில்லை உபத்திரந் தன்னாலே கொல்லரி முடிப்புக் கொடுக்கப் பயமாச்சு இப்படியாகக் கள்ள ரிடக்குகள் செய்கிறார்கள்36 என்ற செய்தி செல்கிறது. அங்கிருந்து விசயரெங்க சொக்கநாதன் கள்ளர்களை அடக்க மதுரைவீரனை அனுப்புகிறான். மதுரை வந்து சேர்ந்த மதுரைவீரன் ஒருநாள் கோயிலுக்குப் போய்த் திரும்பும் போது கள்ளர்களெல்லாம், "கூட்டமிட்டு வளைதடியைக் கொண்டு புறப்பட்டு மதுரை கடைவீதிவந்து நுழைந்து கொண்டு காசுபணம் நாணயத்தைக் கனக்கவே கொள்ளையிட பட்டணத்தி லுள்ள பரிசனங்க ளெல்லோரும் கோவென்ற சத்தங் கூச்சலும் தானுமிட’39 கள்ளர்களோடு களையாய்ப் பறக்க மதுரைவீரன் அவ்விடத்திற்கு விரைந்துவந்து போரிட்டு, "கள்ளர்பற்று நாட்டையெல்லாங் விட்டு 40 வெற்றியுடன் திரும்புகிறான். 'விசயரங்க சொக்கநாதனின் ஆட்சிக் காலம், நாட்டில் தொல்லைகள் மிகுந்து, நாடு அழிவை நோக்கிப் போய்க்கொண்டிருந்த காலம்' என்பர் சத்தியநாதையர். 4 மார்ட்டின் அடிகளாரின் கடிதங்களிலிருந்தும், மதுரைவீர சுவாமி கதையிலிருந்தும் நாம் காணும் முடிவு இதுதான்: மதுரைப் பட்டணத்தில் உள்நுழைந்து தாக்குமளவும், அழகர்கோயிற் பகுதியில் உழவுத்தொழில் நடக்கமுடியாதபடி தொல்லை தருமளவும் கள்ளர்கள் விசயரெங்க சொக்கநாதன் காலத்தில் வலிமை பெற்றிருந்தனர். எனவே இவனது ஆட்சிக்காலத்தில்தான் அழகர் ஊர்வலத்தைக் கள்ளல் மறித்த நிகழ்ச்சியும், அவர்கட்கு 'இறைவனின் கள்ளர் திருக்கோல மரியாதை தருவதற்குக் கோயில் உடன்பட்ட நிகழ்ச்சியும் நடைபெற்றிருந்தல் வேண்டும் எனக் கொள்ளலாம். 5.1.17. கள்ளரும் வைணவமும்: அழகர்கோயில் ஆண்டாரின் சமயத்தாள் பதினெண்மரில் சிவ கங்கை வட்டம் கூட்டுறவுபட்டி வெள்ளையத்தாதர் நாட்டுக்கள்ளர் சாதியினர் ஆவார். கள்ளருக்கும் கோயிலுக்கும் இவ்வளவு நெருங்கிய бн

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/92&oldid=1467953" இலிருந்து மீள்விக்கப்பட்டது