உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அழகு மயக்கம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

அழகு மயக்கம்

தோன்றி மறையும் அற்புதமான உணர்ச்சிகளையெல்லாம் சதா கண்டு மகிழ்ந்து கொண்டே இருக்கலாமென்று ஆசை உண்டாகிறது.

[முருகன் அருகில் வருகிறான்.]


முருகன் : வசந்தா, நாளைக்குப் படம் முடித்துவிடும். காலையில் பத்து மணிக்கே வந்து விட்டால் எழுதி முடித்து முடிப்பு மெருகும் தந்து விடுவேன்.
வசந்தா : அவசியம் பத்து மணிக்கே வருகிறேன். இன்று சினிமாவுக்குப் போகலாமா?
முருகன்: நான் சினிமாவுக்குப் போவதில்லையே! நீ அழைப்பதற்காக வேண்டுமானால் வருகிறேன்.
வசந்தா : எனக்காக வருவதாக இசைந்தீர்களே, அதற்காக தான் சந்தோஷப்படுகிறேன். முருகா, எனக்கு நீங்கள் வரைந்துள்ள ஒவியங்களையெல்லாம் காட்டுவதாகக் கூறினர்களே? இன்றாவது காண்பிக்கக் கூடாதா?
முருகன் : நாளைக்குப் பார்க்கலாமே.
வசந்தா : தினமும் இப்படித்தான் சொல்லுகிறீர்கள். நான் பார்ப்பதால் கண் திருஷ்டி பட்டு விடுமா என்ன?

[பக்கத்தில் இருந்த ஆசனத்தில் அமர்கிறாள்.]

முருகன் : உன்னுடைய அழகுக்கு அவை ஈடாகுமா?
வசந்தா : ஆமாம். நான் ரொம்ப அழகுதான். என் அழகைப் புகழ்வதற்கு நீங்கள் ஒருவராவது இருப்பதைக் கண்டு எனக்கு மகிழ்ச்சி பொங்குகிறது.
முருகன் : ஏன்? மற்றவர்களுக்குக் கண் இல்லையா என்ன?
வசந்தா : அவர்கள் கண்ணில் கலையென்ற திசை இல்லையே! அதைப் போட்டு மூடிவிட்டால்தான் எதைப் பார்த்தாலும் அழகாகத் தோன்றும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகு_மயக்கம்.pdf/16&oldid=1636886" இலிருந்து மீள்விக்கப்பட்டது