20
அழகு மயக்கம்
கிழவி: நல்ல பேச்சு இது. அவன் யாரோ என்ன சாதியோ? சாதி விட்டுச் சாதி கட்டிக்கொள்ள முடியுமா? ராமசாமி குடும்பம் என்ன லேசா? அவர்கள் கௌரவம் என்ன, காரியம் என்ன? அதெல்லாம் நினைத்துப் பார்க்காமல் நீ பேசுவதைப் பார்.
இளமங்கை : அவர் இதையெல்லாம் யோசனை செய்யாமலா இருந்திருப்பார்? அவருக்கு அவனிடத்திலே அதிக இஷ்டம்போல் இருக்கிறது.
கிழவி : அவனுக்கா இஷ்டம்? அதெல்லாம் அவள் பண்ணின மாயம். அவன் சாதியை விட்டுப் போவானா? தங்கமான பிள்ளையாச்சே!
இளமங்கை : உங்கள் விருப்பப்படி முழு மனசோடு ஒப்புக்கொண்டாரல்லவா?
கிழவி : என்னவோ முகூர்த்தம் வைத்தாய் விட்டது. கல்யாணம் ஆனால் எல்லாம் சரியாகிவிடும். எங்கள் காலத்திலெல்லாம் இப்படிக் கிடையாது. தாய் தகப்பன் சொல்படிதான் கல்யாணம் நடக்கும். இதெல்லாம் இந்தக் காலத்தின் கூத்து.
இளமங்கை : மனசுக்குப் பிடித்தமாக இருக்கும் இடத்திலே கல்யாணம் செய்துகொள்ளுவதுதானே நல்லது, பாட்டி?
கிழவி : இந்தக் காலத்துப் பெண்களே இப்படித்தான். காலம் கெட்டுப் போய்விட்டது. அப்படி வேண்டுமானாலும் சொந்தத்திற்குள்ளே மனசுக்குப் பிடித்த பெண்ணாகப் பார்த்துப் பண்ணிக் கொள்ளலாமே! இவன் சாதி விட்டுச் சாகி போகப் பார்த்தானே!
இளமங்கை: என் பாட்டி, அவர் பிடிவாதமாக அந்த "சரோஜாவையே கல்யாணம் செய்திருத்தால் நீங்கள் என்ன பண்ணுவீர்கள்?
[அவன் குரலில் ஒர் ஆர்வம் தொனிக்கிறது.]