48
அழகு மயக்கம்
தாயம்மாள் : சின்ன வயசுப் பெண் நீ . உனக்கு அதெல்லாம் எதற்கு தெரியவேணும்?
விஜயா : நீ இப்படி மறைத்து வைக்க வைக்க அதைத் தெரிந்து கொள்ள ஆசை அதிகமாகிறது. சொல், தாயம்மா.
தாயம்மாள் : சரியம்மா, உன்னிடம் சொல்லாமல் வேறு யாரிடம் சொல்லப் போகிறேன்? அவருக்கு இன்னொருத்தியிடம் நேசம். என்னைத் துரத்திவிட்டு அவளோடு இப்போது இருக்கிறார்.
விஜயா: என்ன, அந்தக் குழந்தைகளைக்கூட நினைக்காமலா?
[அவன் முகத்தில் ஆச்சரியமும்
கவலையும் தோன்றுகின்றன.]
தாயம்மாள்: எட்டு வருஷம் கூடப்பிழைத்தோம். அதற்குள்ளே எத்தனை சண்டை, எத்தனை ரகளை!
[துக்கத்தோடு பேசுகிறாள்.]
விஜயா: அட பாவமே! இப்படிக்கூட ஒரு மனுஷன் இருப்பானா?
தாயம்மாள் : என்ன செய்வது? எல்லாம் என் தலைவிதி.
விஜயா : வேறொருத்தியைக் கல்யாணம் பண்ணிக்கொண்டானா?
தாயம்மாள் : இல்லை விஜயா, கல்யாணம் எதற்கு வேணும்?
விஜயா: பின்னே....வேறெப்படி....!
தாயம்மாள் : இந்தப் பட்டணத்திலே ஒரு மூலையை விட்டு இன்னொரு மூலைக்குப் போய்க் குடியிருந்தால் யாருக்கு என்ன தெரியப்போகிறது? எங்காவதுபோய்ப் புருஷனும் பெண்சாதியும் போல இருப்பார்கள். யார் கேட்கப் போகிறாள்கள்?