உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அழகு மயக்கம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கங்கணம்

67


கருணாவதி : இளவரசரே,வாருங்கள்.

பாக்ஜி ராணி கருணாவதி, வணக்கம். தங்களுடைய ஆணையை நிறைவேற்ற நாங்கள் அனைவரும் சித்தமாக இருக்கிறோம்.

[கருணாவதி காட்டிய ஆசனத்
தில் அமர்கிறான்.]

கருணாவதி : சித்தூரின் பெயரைக் காப்பாற்ற நீங்கள் தயாராக இருப்பதை நான் அறிவேன். நாளைக்குப் போர் தொடங்குமுன் செய்ய வேண்டிய முக்கியமான காரியம் ஒன்று இருக்கிறது. அதைப்பற்றி ஆலோசிக்கத்தான் உங்களை அழைத்தேன். இப்பொழுது மிகத் துரிதமாகச் செல்லக்கூடிய இரண்டு குதிரை வீரர்களை வெளியே அனுப்பவேண்டும்.

பாக்ஜி: உடனே ஏற்பாடு செய்கிறேன். அவர்களை ரகசிய வழியின் மூலம் வெளியேறித் தியோலிக்குப் போகச் சொல்லுகிறேன். அங்கே எனது கடிதத்தைக் காட்டிச் சிறந்த குதிசைகளைப் பெற்றுக்கொள்ளுவார்கள். அவர்கள் எங்கே போகவேண்டும்? கருணாவதி : ஹீமாயூனுக்குக் கடிதம் எடுத்துச் செல்லவேண்டும்.
பாக்ஜி : (ஆச்சரியத்தோடு) ஹுமாயூனுக்கா? கருணாவதி : (நிதானமாக) ஆமாம், அவர் என் கக்கணத்தைப் பெற்றிருக்கிறார். இந்தச் சமயத்தில் அவரை உதவிக்கு அழைக்க எண்ணியிருக்கிறேன்.
பாக்ஜி : அந்த மிலேச்சன் நமக்கு உதவி புரிவானா? குஜராத் சுல்தானும் அவனும் ஒரே ஜாதியாயிற்றே?
கருணாவதி: ஹுமாயூன் கங்கணத்தைப் பெற்றுக் கொண்டதால் எனக்கு எந்தச் சமயத்திலும் உதவி செய்வார் என்று நினைக்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகு_மயக்கம்.pdf/77&oldid=1753623" இலிருந்து மீள்விக்கப்பட்டது