உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அழகு மயக்கம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

அழகு மயக்கம்


சேனாதிபதி: பாக் ஷா ஆக்

நறுங்கிப் புறப்படுகிறான்.


காட்சி நான்கு

இரவு 12 மணி இருக்கும். சித்தூர்க் கோட்டையின் அரச வையில் கருணாவதியும் தியோலி இளவரசனும் உரையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
பாக்ஜி: கருணாவதி தேவி, இந்த இரண்டு நாட்களாக உங்களுடைய வீர பாக்கிரமத்தாலேயே நமது கோட்டைக்குள் பகைவன் நுழையாதபடி தடுத்து விட்டீர்கள்.
கருணாவதி : நான் ஒருத்தி என்ன செய்துவிட முடியும்? எல்லாம் நம் வீரர்களின் தியாகத்தால்தான் முடிந்தது.
பாக்ஜி: ஐந்நூறு வீரர்களை வைத்துக்கொண்டு மதிலில் ஏற்பட்ட பிளவைப் பாதுகாப்ப தென்றால் சாமானியமான காரியமாகுமா அது ?
கருணாவதி : தியோலி இளவரசே, என்னைப் புகழ்ந்தது இருக்கட்டும். நாளைக்கு என்ன செய்யலாம்? சொல்லுங்கள்.
பாக்ஜி : கோட்டைக்குள்ளே இப்பொழுது நூற்றைம் பது வீரர்கள்தாம் இருக்கிறார்கள். அவர்களிலும் பாதிப்பேர் காயமடைந்தவர்கள். இருந்தாலும் அவர் கள் சண்டையிடத் துடித்துக்கொண்டிருக்கிறார்கள்.
கருணாவதி : இன்னும் ஒரு நாளைக்கு மதிலைக் காக்க முடியுமா?
பாக்ஜி: சாதாரணமாக இந்த வீரர்கள் பகதூரின் பெரிய சேனைக்கு முன்னால் ஒரு மணி நேரந்தான் நிற்கமுடியும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகு_மயக்கம்.pdf/84&oldid=1760599" இலிருந்து மீள்விக்கப்பட்டது