பக்கம்:அழியா அழகு.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 124 அழியா அழகு

வருகிருன் என்றல்லவா கினைத்தான்? அந்த எண்ணத்துக்கு

ஏற்ற சிலையில் பரதன் இருப்பான் என்று அவன் எதிர் பார்த்தான். ஆனல் இப்போது அவன் காணுவது என்ன?

என்றெழுந்த தம்பியொடும்

எழுகின்ற காதலொடும் குன்றெழுந்து சென்றதெனக்

குளிர் கங்கைக் கரை குறுகி கின்றவனை கோக்கினன்;

திருமேனி கிலஉணர்ந்தான்; துன்றுகரு கறுங்குஞ்சி

எயினர்கோன் துண்என்ருன்.

(என்று கானே அவனைப் போய்க் காண்பேன் என்று

கூறி, தம்பி - சத்துருக்கனன். கின்றவனே - கின்ற பரதன.

குஞ்சி - தலைமயிர், எயினர்கோன் - வேடர் தலைவனுகிய குகன். துண் என்ருன் - திடுக்கிட்டான்.)

அவன் உள்ளத்தே படைத்துக் கொண்ட உருவத் துக்கும் இப்போது கண்ணுலே காணும் தோற்றத்துக்கும் ஒரு தொடர்பும் இல்லை. இது கேர்மாருக இருந்தது. அதல்ைதான் திடுக்கிட்டான்.

பரதன் போர்க்குரிய கவசத்தை அணிந்து அதற்கேற்ற ஆடைகளைப் புனைந்து கொண்டு வருவான் என்று எண்ணி ன்ை குகன். ஆனல் அவன், தானும் மரவுரியைக் கட்டிக் கொண்டு, துயரத்தால் கீழே விழுந்து புரண்டதனலோ நெடுந்துாரம் கடந்து வந்ததஞலோ புழுதி படிந்த திருமேனி யோடு வந்தான். பகைவகிைய பரதன். கனல் கொப்புளிக்கும்

1. குகப்படலம், 28.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/132&oldid=523334" இலிருந்து மீள்விக்கப்பட்டது