பக்கம்:அழியா அழகு.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 அழியா அழகு

துன்பம்ஒரு முடிவில்லை;

திசைநோக்கித் தொழுகின்றன்; எம்பெருமான் பின்பிறந்தார்

இழைப்பரோ பிழைப்பு: என்ருன், ! பரதனிடம் தான் எதிர்பார்த்த போர்க்கோலம் இல்லை என்று உணர்ந்த பொழுதே குகனுடைய மனம் மாறத் தொடங்கியது; அதற்கு அடையாளமாக அவன் கையில் இருந்த வில் கழுவியது. அதற்கு மேலும் பரதனுடைய திருவுருவத்தில் இராமனுடைய தோற்றத்தை கினேவூட்டும் அடையாளங்களைக் கண்டபோது, அவன் இராகவன் தம்பி என்ற கினேவு கன்ருகப் பதிந்தது. அப்போது, காம் என்ன பைத்தியக்காரத்தனம் செய்தோம்' என்ற இரக்கம் எழுந்தது.

"இப்படி அவன் வருவதற்குக் காரணம் என்ன? -- குகனுக்கு ஒன்றும் தோன்றவில்லை. 'ஏதோ ஒரு துன்பம் இவனுக்கு உண்டாகி யிருக்கிறது இவன் இராமனிடம் பகை பாராட்டுகிறவன் அல்லன்; சிறிதும் குறையாத அன்பு உடையவன்தான். அவன் மேற்கொண்ட தவ. வேடத்தையே இவனும் மேற்கொண்டிருக்கிருன். அதற்குக் காரணம் இன்னதென்று தெரியவில்லை. அவன் உள்ளக் கருத்தை கான் போய்ப் பார்த்துத் தெரிந்துகொண்டு வருகிறேன். நீங்கள் வழியைப் பாதுகாத்து இருங்கள்'" என்று தன் ஏவலர்களிடம் கூறிவிட்டுக் குகன் ஒர் ஒடத்தில் ஏறிக்கொண்டு பரதனைச் சந்திப்பதற்காகத் தனியே வரலாஞன்.

'உண்டிடுக்கண் ஒன்றுடையான்; உலையாத அன்புடையான்; கொண்டதவ வேடமே

கொண்டிருந்தான் குறிப்பெல்லாம்

1. குகப்படலம், 30

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/136&oldid=523338" இலிருந்து மீள்விக்கப்பட்டது