பக்கம்:அழியா அழகு.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 அழியா அழகு

"ஆயிரம் இராமர்கள் உனக்கு ஒப்பாவார்களா?" என்று கேட்டு, "அம்மா' என்று வியப்பில் ஆழ்ந்தான். இராமன் காட்டுக்குப் போனதையும், பரதன் இப்போது, போவதையும் குகன் ஒப்பிட்டுப் பார்த்தான். இராமன் காட்டுக்குப் போனமையால் அரசை அடியோடு இழந்து, விடவில்லை. இடையிலே சில ஆண்டுகள் அரசகை ஆளா விட்டாலும் எப்படியும் அரசாட்சி அவனே விட்டுப் போகாது, அவன் மீண்டு வரத்தான் போகிருன். சில காலம் காட்டுக்குப் போய்வருவதல்ை இராமன் தன் உரிமையை முற்றும் பறி கொடுத்தவ கைவில்லே. அவன் செய்த தியாகம் சில காலத்துக்கே இருப்பது.

ஆனல் பரதன் செய்த தியாகமோ? இரகு, குலத்தில் தலைமகளுகப் பிறந்தாலன்றிக் கிடைக்காக பதவி அது. அதையும் கைகேசி முயன்று அவனுக் காகப் பெற்றிருக்கிருள். தாதையும் பரதனுக்கு, அரசைக் கொடுடபது பற்றித் தடை சொல்லவில்லே. அவ்விருவரும் அதுகூலமாக இருக்க, கிடைத்தற்கரிய ஆட்சி வந்து கிற்கிறது. பரதன் அப்போது, "இது தீவினை: காம் ஏற்றுக்கொள்ளக் கூடாது" என்று மறுத் தான். அதனை நீத்தான்: இராமன் வனஞ்செல்லும் கிலே வந்துவிட்டதே என்று மனம் அழுங்க, அந்தத் துயரத்தை முகம் பறைசாற்ற, அவனும் காட்டுக்குப் புறப்பட்டுவிட்டான். அவன். அரசை வேண்டாம்" என்றதே பெரிய தியாகம், இப்படி நேர்ந்து விட்டதே. என்று சிந்தனையை முகத்தில் தேக்கியதோ அவன் மிகப் பெரியவன் என்பதைக் காட்டுகி றது. அதோடு அவனே மரவுரி உடுத்துக் காட்டுக்கும் புறப்பட்டு: விட்டான் என்ருல் அந்த உயர்குணத்தை வருணிக்கச் சொல் எது? மீட்டும் தன்னே வந்து அடைவதற்குரிய ஒன்றைச் சில காரணம் கருதித் தியாகம் செய்வது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/142&oldid=523344" இலிருந்து மீள்விக்கப்பட்டது