பக்கம்:அழியா அழகு.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 அழியா அழகு

இங்கே தெளிவாக அகத்தியன இராமன் அடிபணிங் தான் என்றும் அகத்தியன் அவனைத் தழுவிக் கொண்டான் என்றும் கம்பன் கூறுகிருன். இராமன், தெய்வத்தின் திருவவதாரம் என்று அவன் வரவை எதிர்பார்த்து கின்ற முனிவன், இப்போது இராமன், தசரத குமாரனதலாலும் தான் முனிவளுதலாலும் உலகியலோடு ஒப்ப கடந்தான் என்று தோன்றுகிறது. எப்படியாயினும், அகத்தியன் இராம. னுடைய அடியில் விழவில்லை; இராமன் வீழ அவனைத் தழுவிக்கொண்டான் என்பது தெளிவு.

இப்படியே ஒருவரை மற்ருெருவர் அடிபணிந்து வீழ்ந்தால் அந்த வணக்கத்தைப் பெற்றவர் தழுவிக் கொள்ளும் காட்சியைக் கம்பராமாயணத்தில் பல இடங்' களில் காணலாம்.

பிற எடுத்துக்காட்டுகள்

பின்னே. வானுலகத்திலிருந்து தசரதன் வந்து இராமனைக் காண்கிருன். வேதத்தால் அறியப்படும் இராமன் அவன் மலர்த்தாள் மிசை வீழ்கிருன்; வீழ்ந்த மைந்தனத் தசரதன் தழுவிக்கொள்கிருன். அயோத்திக்கு. இராமன் மீள்கிருன். இடையே பரத்துவாசன் ஆசிரமத் துக்குப் போகிருன். அம்முனிவன். 'என்னை ஆளுடை. காயகன் எய்தினன்' என்று மிக்க மகிழ்ச்சியோடு எதிர் கொள்கிருன், அப்போது இராமன். 'மாமறைத் தபோதனன் தாள்மிசைப் பணி'கிருன். உடனே அம்முனிவன், "எடுத்து ால் ஆசியோடணேத்து முடியை மோந்து பார்க்கிருன். இராமன் அடிபணிய அதன் எதிர் தான் பணியாமல் தழுவிக் கொள்கிருன். ' . .

1. மீட்சிப் படலம், 118, 117, 2. மீட்சிப் படலம், 185, 186.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/172&oldid=523374" இலிருந்து மீள்விக்கப்பட்டது