பக்கம்:அழியா அழகு.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்டதும் காணுததும் - 215.

'கருத்திலான் கண்ணிலான் ஒருவன்

கைகொடு திருத்துவான் சித்திரம் அயை

செப்புவாய்', '

என்று கம்பன் பிறிதோரிடத்தில் சொல்வதுபோல இவனுக் குக் கருத்து வளம் இல்லை. கருத்தினல் கற்பனை செய்வது முதல் வேலையாக இருக்கவேண்டும். மன்மதன் அதை

இறுதியில் செய்தான்.

அப்படி எண்ணத் தொடங்கினனே, அதையாவது சரியாகச் செய்தாளு? சீதையைப் புறக்கண் கொண்டு பார்த்து அவள் திருமேனி அழகைத் தெரிந்துகொள்வது எளிதன்று. அப்பிராட்டி வெளியழகில் மாத்திரம் அடங்கி விடுபவள் அல்ல. சீதையின் உருவம் புறவடிவிலும் அக உருவமாகிய பண்பிலும் இருக்கிறது. பிராட்டியின் முகத் தில் அவள் அகத்தைக் காண வேண்டும். அவள் கண்ணில் அவள் கருத்தைக் காண வேண்டும். அப்போது தான் அவளே முற்றும் கண்டதாக முடியும். ஒவியக் கலைஞன் திட்டும் ஓவியம் அந்த ஒவியத்தில்ை காட்டப் பெறுபவ ருடைய இயல்புகளையும் உணர்த்தவேண்டும். அப்போது தான் அது சிறந்த ஒவியமாக அமையும். அப்படி அமை வதற்கு ஒவியன் தான் படைக்கும் படைப்புக்குரிய மூலப் பொருளின் குண நலங்களை கன்கு ஆராய்ந்து தெளிய வேண்டும். அப்பால் புறக்கோலத்தையும் காணவேண்டும்.

மதனன் அவ்வாறு செய்யவில்லை. அவன் சீதையை வெறும் அவயவங்களின் குவியலாகவே எண்ணினன். அவள், பண்பைச் சிறிதும் எண்ணவில்லை. எந்த அவயவத்தை

1. இராவணன் மந்திரப்படலம், 87

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/223&oldid=523425" இலிருந்து மீள்விக்கப்பட்டது