பக்கம்:அழியா அழகு.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்டதும் காளுததும் 217

ஆதரித் தமுதில் கோல்தோய்த்து

அவயவம் அமைக்கும் தன்மை யாதெனத் திகைக்கும் அல்லால் மதனற்கும் எழுத ஒண்ணுச் சீதையைத் தருத லாலே

திருமகள் இருந்த செய்ய போதெனப் பொலிந்து தோன்றும்

பொன்மதில் மிதிலை புக்கார், !

(ஆதரித்து - ஆசைப்பட்டு. செய்ய போது - செர் தாமரை.)

மதனனுக்கு எழுதவேண்டும் என்னும் ஆசையிலே குறைவு இல்லை; அவன் ஆதரித்தான். கருவிகளிலும் குறைவு இல்லை அமுதில் கோல் தோய்த்தான். அதற்கு மேலேதான் ஓடவில்லே. புற அழகிேைல மயங்கச் செய்து தன் ஆட்சியை நடத்தும் மதனன், அவயவத்தை எண்ணி ேைன யன்றி அரிய பண்புகளே எண்ணவில்லை. சீதையைக் காணவும் கருதவும் அவனுக்குத் தகுதி இல்லே.

இத்தகைய சீதை அழகே உருவாக அருங்குணமே உயிராக மிதிலையில் இருக்கிருள். அவளுடைய வடிவ எழிலுக்கு இணையே இல்லை. மற்ற மகளிருக்கு ஒவ்வோர் அழகு இருக்கும். பிராட்டியினிடமோ எல்லா அழகுகளும் ஒருங்கே அமைந்திருக்கின்றன. .

உழைகுலாம் நயனத் தார்மாட்டு

ஒன்ருென்றே விரும்பற் கொத்தது;

அழகெலாம் ஒருங்கே கண்டால் யாவரே ஆற்ற வல்லார்! "

1. மிதி&லக்காட்சிப் படலம், ச். 2. கோலங்காண் படலம், 20.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/225&oldid=523427" இலிருந்து மீள்விக்கப்பட்டது