பக்கம்:அழியா அழகு.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழியா அழகு 43%

முன் இரண்ட டி இராமன் சிதையோடும் இலக்கு வளுேடும் போவதைச் சொல்கின்றன. பின் இரண்டடி கம்பன் கின்று கிதானித்து இராமன் அழகை அதுபவித்த உணர்ச்சியை வெளியிடுகின்றன. உற்சவமூர்த்தி எழுந் தருளும்போது வீட்டு வாயிலில் சிறுத்திக் கற்பூர ஆரத்தி செய்வது போல இருக்கிறது. இது, புது நாகரிக உவமை யாகச் சொல்லப்போனல், ஊருக்குப் புறப்பட்டுப் போகிற வர்களே கிறுத்தி வைத்து ஒரு படம் பிடித்துக் கொள்வது போல இருக்கிறது என்று சொல்லாம்.

"கதிரவனது ஒளி தன்னுடைய மேனியினிடத்தில் விரிந்து பரவுகின்ற நீல வண்ணச் சோதியில் மறைந்துபோக, இடை இவளுக்கு உண்டு என்பது பொய்யோ என்று ஐயுறு மளவுக்கு மெலிந்த இடையையுடைய சீதையோடும், இளேய வணுகிய இலக்குவளுேடும் (இராமன்) போனன் என்பது முற்பகுதியில் வரும் செய்தி, . -

வெய்யோன்ஒளி தன்மேனியின்

விரிசோதியின் மறைய, பொய்யோளனும் இடையாளொடும்

இளையாளுெடும் போளுன்.

கம்பன் இராமனுக்கு அருகிலே கின்று பரிவோடு பார்க்கிருன் போலத் தோன்றுகிறது. இராமனுடைய அழகை விளக்கெடுத்துக் காட்டுவது போலக் கதிரவன் காட்டுகிருன். ஆனல் அவனுடைய கதிர்கள் வெம்மை யுடையன அல்லவா? அவை இந்தத் திருமேனியில் பட லாமா? என்று அங்கலாய்க்கிருனே கவிஞன்? கதிரவனுக்கு வேறு பெயர் அவன் கினேவுக்கு வரவில்லை; வெய்யோன்' என்கிருன். ஆனாலும் அவன் ஒளியே இராமனேக் காட்டுகிறது. .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/51&oldid=523253" இலிருந்து மீள்விக்கப்பட்டது