பக்கம்:அழியா அழகு.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழியா அழகு 45%

ஆசை பிறக்கிறது கவிஞனுக்கு. போகிற போக்கிலே நெடுநேரம் சிறுத்தி வைத்துப் பல பாடல்களைச் சொல்ல விருப்பம் இல்லே, சீதையும் இராமனும் ஒருவர் அழகை மற்றவர் பார்த்து மகிழ்வதாகக் கதையை கடத்தப் போகிருன். அதற்குள் இராமன் பெருவனப்பைத் தன் கண்ணுரப் பார்த்துவிட அவனுக்கு ஆசை. இரண்டு அடி களிலே அதைச் சாதிக்க முற்படுகிருன்.

இராமலாவண்யத்தை எப்படிச் சொல்வது? கவிஞன் ஒரு பொருளே வருணிப்பதற்குப் பல வகை உபாயங்கள் உண்டு. அவற்றில் மிகவும் ஆற்றல் பெற்றது உவமை. இங்கே உவமைகளைக் கொண்டு இராமனது பேரழகை அளந்துவிட எண்ணுகிருன்.

அவன் திருமேனிக்கு எதை உவமையாகச் சொல்ல லாம்? அது கரிய வண்ணமுடையதாலுைம் உள்ளங் கவரும், தனமையுடையது. உள்ளத்தை மயக்குவதும் கரு கிறம் உள்ளதுமாக உள்ள பொருள் ஒன்று அவன் வினேவுக்கு வருகிறது. அதுதான் மை. வசிய மை இருக்கிற தல்லவா? அதை உவமையாகச் சொல்ல எண்ணுகிருன், அது போதுமோ போதாதோ என்ற ஐயமும் இருக்கிறது. ஆகையால் மை ஒன்றையே சொல்லி வரையறுத்து விடும் துணிவு அவனுக்கு இல்லை. இருந்தாலும் சொல்லிப் பார்க்க லாம் என்று தொடங்குகிருன்.

மையோ!

ஒன்றை ஆசையுடன் செய்கிருேம். செய்த பிறகு, அதைப் பின்னும் கன்ருகச் செய்யவேண்டும் என்று தோன்றுகிறது. குழந்தைக்கு அலங்காரம் செய்கிருேம். ஒர் உடையைப் போடுகிருேம். அது ஓரளவு அழகாக இருந்தாலும் இன்னும் அழகாக இருக்க வேண்டும் என்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/53&oldid=523255" இலிருந்து மீள்விக்கப்பட்டது