பக்கம்:அழியா அழகு.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன மாற்றம்

63


[இருத்தி - உட்காருவாயாக. அருத்தி - அன்பு. திருத்தி னென் - ஒழுங்காக்கி, முறுவலன் - புன்சிரிப்புடையவனகி..] குகனே நோக்கி இராமன் உசிதமாகப் பேசினன். அவனுடைய அன்பைப் பாராட்டினன். ஆனல் அவன் அளித்தவற்றை உண்ணவில்லை. "உள் ளத்தின் அன்பால், அந்தச் சிறந்த அன்பு வெளிப்படக் கொண்டு வந்தவை இவை என்ருல் அமுதத்தைவிடச் சிறந்தன என்றே கொள்ளவேண்டும். மிக்க பரிவோடு ஏற்றுக் கொண்டன வால்ை தூயவை; எங்களுக்கும் உரியவை. அன்பை உணர்ந்து கொண்ட அளவில் இவற்றை நாம் உண்டவர்களே ஆகி விட்டோம் அல்லவா?' என்று நயமாக இராமன் பேசுகிருன்.

"அரியதாம்! உவப்ப உள்ளத்

தன்பினுல் அமைந்த காதல் தெரிதசக் கொணர்ந்த என்ருல்

அமிர்தினும் சீர்த்த அன்றே? பரிவினில் தpஇய என்னின்

பவித்திரம்; எம்ம ஞேர்க்கும் உரியன; இனிதின் நாமும்

உண்டனம் அன்ருே?" என்ருன். ' (அரிய - அரியவை, சீர்த்த - சிறப்புடையவை. பரிவு - அன்பு. கழி இய ஏற்றுக்கொண்டவை. பவித்திரம் - துாயவை.)

பரிவினில் தழி இய என்னின் பவித்திரம்; எம்மனேர்க் கும் உரியன என்று இராமன் கூறும் போது, இவை இயல்பிலே பவித்திரம் அற்றனவானலும் பரிவோடு ஏற்றுக் கொண்டால் பவித்திரம் ஆவன. இவை எம்மனேர்க்கு உரியன அல்லவானுலும் அன்பு கருதி எமக்கும் உரியன ஆயின என்ற குறிப்பும் அதனூடே ஒலிக்கிறது.

1. கங்கைப். 42.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/71&oldid=1296563" இலிருந்து மீள்விக்கப்பட்டது