பக்கம்:அழியா அழகு.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவாய் வேட்டுவன் 71

பார்க்க வரும் வேடர்கள் கையுறைகளோடு வருவதை அவன் உணர்ந்திருப்பான் அல்லவா?

இராமனுடைய நாகரிக வாழ்க்கையை அவன் அறி யான். ஆனல் அவனிடம் அன்பு பூண்டு வந்தான். தேனும் மீனும் கையுறையாகக் கொண்டு வந்தான்.

இராமன் தங்கியிருக்கும் இடத்தை அணுகிய போது தன்னுடன் வரும் வேடர்களே அப்புறத்தில் கிறுத்திவிட்டு: தான் வைத்திருந்த வில்லையும் வாக்ளயும் வைத்துவிட்டுக் கையுறைகளோடு வர்தான். சிறிதும் தளர்வு இல்லாத மனத் தோடு, இராமனேக் காணப்போகிருேம் என்ற ஊக்கமும் அப்பெருமானிடம் உள்ள அன்பும் உந்தத் தவப்பள்ளியின் வாயிலே கண்ணினன்.

கம்பன் குகனுடைய ஆடை அணி, படை ஆகியவற் றைச் சொல்வதைப் பார்த்தால் அவனே முரட்டு வேடன் என்றுதான் எண்ணத் தோன்றும், விரதத்தால் இக்ளத்த மேனியும் அருளொழுகும் கண்ணும் உடைய முனிவர், காயும் கிழங்கும் கனியும் அளிக்க உண்டு இராமன் இருந்த செவ்வியில், அவர்களுடைய தோற்றத்துக்கு முற்றம் மாருன தோற்றத்தைப் பெற்றவகைக் குகன் வருகிருன். கச்சராவைப்போல நடுக்கஞ் செய்யும் பார்வையும், சீற்ற மின்றியும் தி யெழ நோக்கும் இயல்பும், கூற்றமும் அஞ்சக் குமுறும் குரலும் உடைய அவனிடத்தில் இராமனிடம் ஈடுபடுவதற்கு ஏற்ற பண்புகள் இரண்டு இருக்கின்றன; அவன் பிச்சராம் அன்ன பேச்சினன்; அன்பினன்.

தவப்பள்ளியின் வாசலில் போய் கின்று கூவ எண்ணி ன்ை போலும், பெரியவர்கள் இருக்கும் இடத்தில் கினைத்த படி பேசக்கூடாதென்ற பண்பு தெரியாதவன். அவன் கூவா முன்னம் இலக்குவன் வந்தான். "நீ யார் அப்பா' என்று கேட்டான். உடனே அன்போடு வணங்கினன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/79&oldid=523281" இலிருந்து மீள்விக்கப்பட்டது