பக்கம்:அழியா அழகு.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தீராக் காதலன்

வாய் புதைத்துப் பணிவுடன் கின்ற குகனக் கண்டஇராமன், "நீ அமர்க' என்ருன். குகன் இராமனேக் கண் கொண்டு காணும் ஈடுபாட்டில், அவன் முன்னே நாம் உட்காருவதா? என்று எண்ணின்ை, ஆதலின் இராமன் சொன்னதைக் கேட்டு அவன் உட்காரவில்லை.

மெல்லத் தன்னுடைய அன்பைப் புலப்படுத்திக் கொண்டே, 'தேவரீர் உண்பதற்கு ஏற்றவாறு தேனும் மீனும் கொணர்ந்தேன். திருவுள்ளம் யாதோ?" என்று கேட்டான். அவனிடம் உண்டான மெய்ப்பாடுகள் அவனுடைய பேரன் பைப் புலப்படுத்தின. 'எல்லே நீத்த அருத்தியன்', அளவில்லாத ஆர்வமுடையவன் என்பதை அவனுடைய தோற்றமே எடுத்துரைத்தது. அவனுக்குத் தான் எத்தனே ஆசை இராமனுக்கு இவை உணவாகும் என்று எண்ணித் தேனையும் மீனையும் கொண்டு வந்தான். அந்த இரண்டும் அவன் வாழும் இடத்திலும தொழில் செய்யும் இடத்திலும் கிடைப்பவை. ஆதலின் அவற்றைக் கையுறையாகக் கொண்டு வந்தான். 'இராமன் இவற்றை உண்பான?’ என்று அவன் யோசிக்கவில்லை.

இராமன் அவன் தோற்றத்தையும் சொல்லேயும் கண்டான், கேட்டான். "எங்கள் ஆசாரத்துக்கு மீன் உதவாது' என்று சொன்னை? இல்லை. அவனுடைய மாசு மறுவற்ற அன்பை கன்ருக உணர்ந்து கொண்டவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/83&oldid=523285" இலிருந்து மீள்விக்கப்பட்டது