பக்கம்:அழியா அழகு.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*76 அழியா அழகு

இராமன். ஆலுைம் அவன் கையில் வைத் திருந்த மீ&னப் பார்க்கையில் அவனுக்குச் சற்றே நகை தோன்றியது. உடன் இருந்த முனிவர்கள் எப்படி A&னப்பார்களோ! ஆதலின் அவர்களைப் பார்த்துப் புன்னகை பூத்த இராமன், குகனப் பார்த்துச் சில வார்த்தைகள் சொல்லலான்ை.

இருத்தி ஈண்டு" என்ன லோடும்

இருந்திலன்; எல்லே நீத்த அருத்தியன்: ‘'தேனும் மீனும்

அமுதினுக்கமைவ தாகத் திருத்தினென் கொணர்ந்தேன்; என்கொல்

திருவுளம்?' என்ன, வீரன் விருத்தமா தவரை கோக்கி

முறுவலன் விளம்ப லுற்ருன்.

(இருத்தி - உட்காருவாயாக. அருத்தியன் - ஆர்வத்தை உடையவன். திருத்தினென் - சித்தம் செய்து முற்றெச்சம். வீரன் - இராமன். விருத்த மாதவரை-முதிய முனிவர்களே.)

இராமன் குகனுடைய அன்பை உணர்ந்தவன்; ஆல்ை அவன் கொணர்ந்ததை ஏற்க முடியாதவன். 'இது வேண்டாம் என்ருல் அந்த வேடர் தலைவனது மனம் புண்படும். ஆதலின் இராமன் அவன் உள்ளம் உவக்கவும், தன் வழக்கத்துக்கு மாருகாதபடியும் நயமாகப் பேசினன். "மனமார அன்பு வைத்து ஆர்வம் வெளிப்படக் கொண்டு வந்தவை இவை; ஆதலின் இவை அரியவை: அமுதத்தைவிடச் சிறந்தவை. இவை தாயவையே. எங் களுக்கும் இவை உரியனவே. நாமும் இவற்றை உண்ட வர்களே ஆகிவிட்டோம் அல்லவா?’ என்ருன்.

1. கங்கைப் படலம், 41

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/84&oldid=523286" இலிருந்து மீள்விக்கப்பட்டது