பக்கம்:அழியா அழகு.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தீராக் காதலன் 77.

மீனக் கண்ட மாதவர்களின் உள்ளத்துள்ளே அரு வருப்பு உண்டாகி யிருக்க வேண்டும். இவை தூயன அல்ல' என்ற கினேப்பு அவர்களுக்கு இருப்பதை உணர்ந்தே இராமன் புன்முறுவல் பூத்தான். குகன் செய்தது பேதை மைச் செயல் என்று இராமன் எண்ணியிருந்தால் அவனேப் பார்த்துப் புன்முறுவல் பூத்திருப்பான். அப்படிச் செய்யவில்லை. "விருத்த மாதவரை நோக்கி முறுவலன்' என்றே கம்பன் பாடுகிருன். அவர்கள் உள்ளத்திலே ஒடிய எண்ணங்களே உணர்ந்துகொண்ட இராமன், அவர்கள் குகனுடைய அன்பை அறியாமல் இருக்கும் அறியாமையை எண்ணியே முறுவல் பூத்திருக்க வேண்டும். அவர்கள் வாயாலே சொல்லாததை உணர்ந்து இராமன் விடை சொல்வது போலச் சொல்கிருன்.

'இவை எங்கும் எளிதில் கிடைக்கும்; அரிய பொரு, ளல்ல" என்று ஒருவர் சொல்ல அதை மறுத்துச் சொல் பவனைப் போல, "அரிய தாம்' என்று ஆரம்பிக்கிருன் இராமன். . - அரியதாம் உவப்ப உள்ளத்து

அன்பினுல் அமைந்த காதல் தெரிதரக் கொணர்ந்த என்ருல்

அமிர்தினும் சீர்த்த அன்றே!'

'அரிய என்று சொன்னலே போதுமாக இருக்க: 'அரிய தாம் என்று வற்புறுத்துவதற்கு ஒரு காரணம் இருக்கவேண்டும். முனிவர்களின் உள்ளத்தே தோன்றிய ஐயத்தைத் தெளிவிக்கும் பொருட்டே அவ்வாறு சென்ன்ை இராகவன். அரிய என்று சொன்னதோடு அமையாமல்,

அமிர்தினும் சீர்த்த' (அமுதத்தைவிடச் சிறப்புடையன.). என்று சொன்னன். அதற்குக் காரணத்தையும் எடுத்துக் காட்டினன், அங்கேதான் குகனுடைய அன்பின் திறத்தை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/85&oldid=523287" இலிருந்து மீள்விக்கப்பட்டது