பக்கம்:அழியா அழகு.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தீராக் காதலன் 79

அவை அரியன என்றும் அமு தினும் சீருடையன என்றும் தெரியவரும். அப்படிப் பார்க்கும் பார்வை வேண்டும்; அந்தப் பார்வைக்கு மூலமாக இருப்பது அன்பை உணரும் பரிவு, குழந்தை அழுக்காக இருக்கிறதென்று காணும் போது அயலார் அதை அணுக மாட்டார்கள். ஆனல் பரிவுடைய தாயோ அதை அணப்பாள். குகனுடைய காணிக்கையைப் பரிவுடன் கோக்கும் இயல்புடையாருக்கு அது மீனகத் தோற்ருது; அவன் உள்ளட் பெருங்காதலின் அடையாளம் என்றே தோற்றும். அவன் உள்ளம் தூயவன் என்று, எதையும் சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் இலக் குவனே சொன்னபோது, இராகவன் அந்தத் தூய்மையைக் கண்டுகொள்ள மாட்டான? அந்த உள்ளத்தூய்மைக்குச் சின்னம் இந்தக் கையுறை என்று எண்ணில்ை இவையும் தாயன என்றே தோன்றும். அப்படி எண்ணும் பரிவு இராமனிடம் இருந்தது.

ஆதலின்,

"பரிவினில் தழீஇய என்னில்

பவித்திரம்'

என்ருன் "பரிவோடு ஏற்றுக்கொண்டால் இவை தாயன வாம்' என்ற பேச்சில் ஒரு கி. க்தனே இருக்கிறது. பரிவோடு ஏற்றுக்கொள்ளாவிட்டால் அவை தாயன அல்ல என்றே தோன்றும். முனிவர்களுக்கு அப்படித் தோன்றின. அவர்கள் எண்ணத்தை அறிக்கே, எந்தக் கண்கொண்டு காணவேண்டும் என்பதை அறிவுறுத்தின்ை இராமன்.

இவை வேடர்கள் உன்பன மக்கு உரியன வாகுமோ? என்று முனிவர்கள் எண்ணினர்கள். ஆதலின், 'அரியவை தாம்; அமுதைவிடச் சிறந்தன. பவித்திரம்' என்று சொன்ன தோடு கில்லாமல், "எம்மனேர்க்கும் உரியன" என்று இராமன் சொன்னன். அப்படிச் சொன்னபோது முனி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/87&oldid=523289" இலிருந்து மீள்விக்கப்பட்டது