பக்கம்:அவமானமா அஞ்சாதே.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

அவமானமா? அஞ்சாதே!



என்று எண்ணித் துடித்து, எண்ணற்ற பின்புறக் காரியங்களைப் பண்ணி மகிழும் பண்பற்ற பொறாமை. தேரை இழுத்து தெருவில் விட்டுவிட்டு ஒடிப்போய் ஒளிந்துகொண்டு வேடிக்கை பார்த்து மகிழ்கின்ற விஷமிகளின் விஷமப் பொறாமை.

இன்னும் பல உண்டு. பின்னர் விளக்குகிறேன். பொறாமையுள்ள தன் சித்தியின் சீற்றமிகு சொல்லால் அவமானப்பட்ட துருவன் என்ற சிறுவன், துருவ நட்சத்திரமாகத் திகழும் அளவுக்கு முன்னேறி உயர்ந்தான். வசிஷ்டரிடம் அவமானப் பட்ட விசுமாமித்திரர், பிரம்ம ரிஷி என்று பட்டம் பெற முயன்ற கதை எல்லாம் நமக்குத் தெரியும்.

தெரியாத சூழ்நிலையில் தேர்ந்தவர்கள் கதைகளைப் பற்றி எழுதுவதை விட, தேர்ந்த அனுபவங்களைத் தந்த, நான் பெற்ற பல அவமானங்களை இங்கு எழுதினால் படிப்பவர்க்கு நியாயமாகவும் இருக்கும் நன்மையும் பயக்கும் என்று நம்புகிறேன்.

தமிழில் விளையாட்டுத்துறை இலக்கியம் என்பது புதிய துறை.

2000 ஆண்டுகளாக கேட்பாரற்றுக் கிடந்த, விளையாட்டுகள் பற்றி ஒதுக்கப்பட்டுக்கிடந்த, மற்றவர்கள் எழுதவும் பேசவும் முன்வராத ஒரு துறையைப் பற்றி, என்னை சிந்திக்க வைத்து, செயல்படுகின்ற வைராக்யத்தை வளர்த்து, வாழ்க்கையையே அர்பணித்துக் கொள்கிற வைர நெஞ்சத்தை நல்கியதெல்லாம் நான் பெறற அவமானங்கள் கொடுத்த கொடைதான்.

அவற்றை உங்களுக்குச் சொல்வதில் எனக்கு மகிழ்ச்சியே தவிர அவமானங்கள் இல்லை என்பதால் உங்களுக்கு தொடர்ந்து சொல்ல இருக்கிறேன். அடுத்த பக்கத்திற்கு வாருங்கள்!