பக்கம்:அவமானமா அஞ்சாதே.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

அவமானமா? அஞ்சாதே



உப்புக்கு ஒப்பாக நீங்கள் உங்களை உருவாக்கிக் கொண்டால், உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்தான்.

'உம் என்று இருப்பது நல்லது என்றோம். எப்படி உம்மென்று இருப்பது?'

எதுவும் பேசாமல் இருப்பவர்களை 'உம்மணாமூஞ்சி' என்று செல்லப் பெயர் இட்டு அழைப்பது நம் வழக்கம் இங்கே உம் என்று இரு என்றால் அப்படித்தானா?

இதற்கு பலவாறாக நாம் பொருள் கொள்ளலாம்.

அதிகமாகப் பேசுவதை அநாவசியம் என்பார்கள். சொல்ல விரும்புவதற்கு மேலே பேசிக் கொண்டிருந்தால் பொருளில்லாத வீண் வார்த்தை ஆகிவிடும்.

அதைத்தான் வழ வழா, கொழ கொழா பேச்சு என்பார்கள். அறுவை என்பார்கள். ரீல் என்பார்கள்.

அப்படிப் பேசுபவரை விட்டு அகலப்பார்ப் பார்கள். கேட்பவர்கள் அல்லது அகற்றப் பார்ப்பார்கள்.

அதிகம் பேசினால் அதுவே துன்பம் என்று பெரியவர்கள் சொல்வது உண்மைதான். அதிகமாகப் பேசுவோருக்கும் துன்பம், அதைக் கேட்பவர்களுக்கும் துன்பம்.

கொஞ்சமாகப் பேசி நிறைய கேட்க வேண்டும் என்பதுதான் இங்கே நம் மேற்கொள்ள வேண்டிய முக்கிய விஷயமாகும்.

அதிகம் பேசுபவர்கள் வாயை கொடுத்து மாட்டிக் கொள்வார்கள் அமைதியாகக் கேட்பவர்கள் எதிலும் சிக்கிக் கொள்ளாமல் தப்பித்துக் கொள்கின்றார்கள்.

அமைதியாகக் கேட்கும் போதும், பேசும் போதும் வெளிப்படுத்துகிற வார்த்தைகளில் நிதானம் இருக்கும். நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்கிற திறமை ஜொலிக்கும் இந்த 'உம்' இப்படித்தான் பயன்படுகிறது.