பக்கம்:அவமானமா அஞ்சாதே.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

அவமானமா? அஞ்சாதே!



விளையாட்டே கல்வி விளையாட்டே உணவு. விளையாட்டே வாழ்க்கை என்று வசந்த காலத்தை வரவழைத்துக் காட்டுவது கற்காலம் (6 முதல் 15 வயது வரை).

4. பிற்காலம்: (பின் + காலம்)

(பின் + காலம்) பின் செல்லுகின்ற காலம். ஆணாக இருந்தால் பெண் பின்னேயும், பெண்ணாக இருந்தால் ஆண் பின்னேயும் செல்வதில் பெருமைப்படுகிற காலம்

தான் விரும்புகிற ஒருவருக்கே தன்னையே தந்துவிடுகிற, தத்தம் செய்து விடுகிற அசாத்திய துணிவு நிறைந்த காலம். எதிர்காலம் பற்றிய சிறு சிந்தனைகூட இல்லாமல், இன்றே வாழ்ந்து முடித்துவிடவேண்டும் என்ற வேகமும் வெறியும் வேட்கையும் விளையாடுகிற வெகுளித்தனமான பருவம்.

இந்தக் காலக்கட்டத்தை காதல் காலம் என்றே பலர் நினைக்கிறார்கள். காதல் செய்யாத வாழ்வு ஒரு வாழ்வா என்ற கேள்வியிலேயே. தங்களை தொலைத்து விட்டிருப்பவர்கள், தொலைந்து போனவர்கள். நலிந்து போனவர்களின் நடமாடும் கூடாரம்போல் இருக்கிறது. இந்த பிற்காலம் (15 வயது முதல் 30 வரை).

5. மற்காலம்: (மல் + காலம்)

திருமணம் நடந்து குடும்பஸ்தர் ஆகிவிடுகிற காலம். குடும்பப் பொறுப்பானது கொஞ்சங் கொஞ்சமாகப் பெரும் சுமையாகி வருகிற காலம் திருமணம் ஆகாதவர்கள், திருமணத்திற்கு முயன்றும் நடைபெறாமல் அதில் தோற்றவர்கள், தங்கள் குடும்ப அங்கத்தினர்களைக் காக்கின்ற பொறுப்பை கடமையாக்கிக் கொண்டு, தங்களையே தேய்த்துக் கொண்டு மாய்த்துக் கொள்கிற வகையில் போராடுகிற காலம் இது. மல் யுத்தம் போடுகிறது போல போராடி, சோதனைகளிலும் வேதனைகளிலும் மல்லாடி அல்லாடி வாழ்கிற காலம் (30 முதல் 50 வரை).