பக்கம்:அவள்.pdf/114

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


70 லா. ச. ராமாமிருதம் பொறுமைக்கு மத்தவாளை எப்படி நம்புவது? தவிர அப்பப்போ துணி மாத்துவது, உடல் சம்பந்தமான காரியங்கள் வேறேயிருக்கே! ஒரு நாளா, இரண்டு நாளா, ஒவ்வொரு நாளா மூன்று வருடங்கள்... ஆனால் இப்போ ரெண்டுபேருக்கும் வயசு என்ன ஆச்சு? தாத்தாவுக்குப் படுக்கையிலேயே கரைச்ச சாதத் திலும், கஞ்சியிலும், உடம்பு அன்னாடம் இம்மியென ஒடுங்க ஆரம்பிச்சாச்சு. அதைப் பார்க்கப் பார்க்கப் பாட்டியின் உடல் கோளாறுகள் அதிகரிக்கத் தலைப் பட்டன. கூடவே எல்லாவற்றிற்கும் மேல் ஒரு திகில், நெஞ்சில் எலி பிராண்டல். அடிக்கடி அவளை அறியாமலே கை, தாலிச் சரடைத் தொடடுக் கொள்ளுமாம். பழுத்த சுமங்கவி. வாய்விட்டுச் சொல்லிக்கிற விஷயமா? மா ன த் தி ன் ரூபங்கள் எப்படி எப்படியெல்லாம் எடுக்கின்றன? இது சமுதாய எடைமானம் இல்லை. வேறு ஏதோ ஒண்ணு, அவாவாளுடைய சத்தியத்தின் எடை, அவாவாளுக்கு மட்டும்தான் தெரியும் போல ©(536. #555 u & 37.6% Spellbound. But not Hitchcock, சொல்லே மந்திரமடா அது இது. 'ஆகவே ஒரு வெள்ளிக்கிழமை. எண்ணெய் ஸ்னானம் பண்ணிண்டு, பட்டு உடுத்திண்டு, குத்து விளக்கை ஏற்றி நமஸ்காரம் பண்ணிவிட்டு, பாட்டி, விசுப்பலகை அடியில் தலைப்பை விரித்து, முழங்கையே தலைக்கு உயரமாகப் படுத்துவிட்டாள். பாட்டி தினம் எங்கே படுத்துண்டிருந்தாள்னு அசட்டுக் கேள்வி கேட்காதீர்கள். இது தனிப்பட்ட படுக்கை-அல்ல, ஸ்மிக்ஞை, 'அப்புறம் எழுந்திருக்கவேயில்லையா, குளிக்கலியா, சாப்பிடல்லியா வளைய வரல்லையா?” Dont be sily, எனக்குக் கோபம் வரது. எல்லாம் முறைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/114&oldid=741452" இருந்து மீள்விக்கப்பட்டது